மாநில பாட்மிண்டன்: கோவையில் தொடக்கம்
கோவை, ஜூலை 5: மாநில அளவிலான சப்-ஜூனியர் ரேங்கிங் பாட்மிண்டன் போட்டி கோவையில் வியாழக்கிழமை தொடங்கியது. ஸ்பார்க்லர்ஸ் பாட்மிண்டன் அகாதெமி, கோவை மாவட்ட பாட்மிண்டன் சங்கம் ஆகியவற்றின் சார்பில் நடைபெறும் இ


கோவை, ஜூலை 5: மாநில அளவிலான சப்-ஜூனியர் ரேங்கிங் பாட்மிண்டன் போட்டி கோவையில் வியாழக்கிழமை தொடங்கியது. ஸ்பார்க்லர்ஸ் பாட்மிண்டன் அகாதெமி, கோவை மாவட்ட பாட்மிண்டன் சங்கம் ஆகியவற்றின் சார்பில் நடைபெறும் இப் போட்டியில் 700 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். ஆடவர், மகளிர் பிரிவுகளில் 10, 13 மற்றும் 15 வயது பிரிவுகளில் ஒற்றையர் மற்றும் இரட்டையர் போட்டிகள் நடைபெறுகின்றன.
தொடக்க நாளான வியாழக்கிழமை நடைபெற்ற 13 வயதுக்குட்பட்டோர் போட்டியில் ஆடவர் ஒற்றையர் முதல் சுற்றில் கோவை வீரர் பி.வி. ஸ்ரேயாஸ் 21-7, 21-3 என்ற நேர் செட்களில் அரவிந்தனை வென்றார். மகளிர் ஒற்றையர் முதல் சுற்றில் கோவை ஸ்வாதிகா 21-16, 21-13 என்ற நேர் செட்களில் தஞ்சாவூர் யுவஸ்ரீயை தோற்கடித்தார்.
10 வயதுக்குட்பட்டோர் போட்டியில் ஆடவர் ஒற்றையர் முதல் சுற்றில் புதுக்கோட்டை முகமது அப்ரின்ஷா 21-8, 21-15 என்ற நேர் செட்களில் திருவள்ளூரின் சங்கர் முத்துசாமியை வீழ்த்தினார். இறுதிப் போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...