எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

சென்னை ஓபன்: காலிறுதியில் டிப்சரேவிச்

சென்னை, ஜன.6: சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் இரண்டாவது சுற்று ஆட்டத்தில் செர்பியாவின் டிப்சரேவிச் வெற்றிபெற்று காலிறுதிக்கு தகுதிபெற்றார்.  இவர் 6-2, 7-6 (3) என்ற கணக்கில் ரஷியாவின் அலெக்சாண

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:47 am

சென்னை, ஜன.6: சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் இரண்டாவது சுற்று ஆட்டத்தில் செர்பியாவின் டிப்சரேவிச் வெற்றிபெற்று காலிறுதிக்கு தகுதிபெற்றார்.

 இவர் 6-2, 7-6 (3) என்ற கணக்கில் ரஷியாவின் அலெக்சாண்டர் குட்ரியாவ்ட்சேவை தோற்கடித்தார்.

 சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியின் நான்காவது நாள் ஆட்டம் சென்னை நுங்கம்பாக்கம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய டென்னிஸ் மைதானத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

 மாலையில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் கடந்த முறை அரை இறுதி வரை முன்னேறிய செர்பியாவின் ஜான்கோ டிப்சரேவிச், ரஷியாவின் அலெக்சாண்டர் குட்ரியாவ்ட்சேவை சந்தித்தார்.

 முதல் செட்டின் 4-வது கேமில் குட்ரியாவ்ட்சேவின் சர்வீûஸ முறியடித்து 3-1 என்று முன்னிலை பெற்றார் டிப்சரேவிச். பின்னர் அடுத்த கேமையும் அசத்தலாக கைப்பற்றினார் டிப்சரேவிச். 3 மற்றும் 4-வது கேமில் வேகமான ஆட்டத்தை வெளிப்படுத்திய குட்ரியாவ்ட்சேவ், நேர்த்தியான ஷாட்டுகளை அடிக்கத் தவறினார். அதனால் பல முறை தேவையில்லாமல் பந்தை வெளியே அடித்து இந்த கேம்களை இழந்தார்.

 அதேசமயம் டிப்சரேவிச் வேகமான ஷாட்களை அடிக்கவில்லை. வேகமாக விளையாடாவிட்டாலும், விவேகமாக விளையாடி நேர்த்தியான ஷாட்களால் குட்ரியாவ்ட்சேவை திணறடித்தார். வேகமாக விளையாடிய குட்ரியாவ்ட்சேவ் எளிதில் களைப்படைந்தார். அதை தனக்கு சாதமாகப் பயன்படுத்திக் கொண்ட டிப்சரேவிச், 8-வது கேமில் குட்ரியாவ்ட்சேவின் சர்வீûஸ முறியடித்து 6-2 என்ற கணக்கில் முதல் செட்டை முடிவுக்கு கொண்டு வந்தார்.

 இரண்டாவது செட்டில் இருவரும் மாறிமாறி புள்ளிகளைப் பெற்றனர். இந்த செட்டில் குட்ரியாவ்ட்சேவின் ஆட்டம் மெச்சும்படியாக இருந்தது என்றே சொல்லலாம். இருவரும் சவால் அளிக்கும் வகையில் விளையாடியதால் இந்த செட்டின் முடிவில் இருவரும் 6-6 என்ற கணக்கில் சமநிலை பெற்றனர்.

 இதையடுத்து டைபிரேக்கர் வாய்ப்பு வழங்கப்பட்டது. இதை சரியாகப் பயன்படுத்திய டிப்சரேவிச் 7-3 என்ற கணக்கில் அந்த செட்டை கைப்பற்றினார். இதன் மூலம் அவர் 6-2, 7-6 (3) என்ற கணக்கில் குட்ரியாவ்ட்சேவை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதிபெற்றார்.

 ராபின் ஹேஸி வெற்றி

 மற்றொரு ஒற்றையர் ஆட்டத்தில் நெதர்லாந்தின் ராபின் ஹேஸி 4-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் ஜப்பானின் யூச்சி சுஜிடாவை வென்றார்.

 மரின் சிலிச் ஜோடி வெற்றி

 இரட்டையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் குரேஷியாவின் மரின் சிலிச்-இவான் டோடிக் ஜோடி 6-2, 6-4 என்ற நேர் செட்களில் தாய்லாந்தின் சன்சாட் மதிவதனா, சஞ்சாய் மதிவதனா ஜோடியை வென்று அரை இறுதிக்கு முன்னேறியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.