எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

பெர்டிச் முன்னேற்றம்: இந்திய வீரர்கள் யூகி பாம்ப்ரி, போபண்ணா தோல்வி

சென்னை, ஜன.4: சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி ஒற்றையர் ஆட்டத்தில் இந்திய வீரர்கள் யூகி பாம்ப்ரி, ரோஹன் போபண்ணா ஆகியோர் தோல்வியடைந்து போட்டியிலிருந்து வெளியேறினார். ஆனால் ஜெர்மனியின் தாமஸ் பெர்டிச்சுக்கு வ

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:45 am

சென்னை, ஜன.4: சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி ஒற்றையர் ஆட்டத்தில் இந்திய வீரர்கள் யூகி பாம்ப்ரி, ரோஹன் போபண்ணா ஆகியோர் தோல்வியடைந்து போட்டியிலிருந்து வெளியேறினார். ஆனால் ஜெர்மனியின் தாமஸ் பெர்டிச்சுக்கு வெற்றி எளிதானது.

 ÷இப்போட்டியின் தகுதிச் சுற்று ஆட்டங்களில் பங்கேற்காமல் நேரடியாக (வைல்ட்கார்ட்) முதல் சுற்றில் பங்கேற்ற இந்திய வீரர் யூகி பாம்ப்ரிக்கு வெற்றி வசமாகவில்லை. ரஷியாவின் அலெக்சாண்டர் குட்ரியாவ்ட்ஸிடம் தோல்வியைச் சந்தித்து போட்டியிலிருந்து வெளியேறினார்.

 ÷போபண்ணா, ஸ்விட்சர்லாந்தின் ஸ்டானிஸ்லா வாவ்ரிங்காவிடம் 6-4,6-4 என்ற நேர் செட்களில் தோல்வியடைந்தார். கடந்த ஆண்டும் வாவ்ரிங்காவிடம்தான் போபண்ணா தோற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

 ÷பிரதான மைதானத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் முதல் செட்டின் முதல் கேமை கைப்பற்றிய யூகி பாம்ப்ரி, அடுத்த 4 கேம்களையும் குட்ரியாவ்ட்ஸிடம் இழந்தார். குட்ரியாவ்ட்ஸின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் தடுமாறிய பாம்ப்ரி முதல் செட்டை 2-6 என்ற கணக்கில் இழந்தார்.

 பின்னர் நடைபெற்ற இரண்டாவது செட்டின் 3-வது கேமில் பாம்பரியின் சர்வீûஸ எளிதாக முறியடித்து முன்னிலை பெற்றார் குட்ரியாவ்ட்ஸ். இந்த கேமின்போது குட்ரியாவ்ட்ஸின் அதிவேகமான ஷாட்களை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறிய பாம்ப்ரி, பந்தை தேவையில்லாமல் தூக்கியடித்து குட்ரியாவ்ட்ஸýக்கு நல்ல வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தார். இதனால் பாம்ப்ரியின் தோல்வி தவிர்க்க முடியாததானது. இறுதியில் அந்த செட்டையும் 6-1 என்ற கணக்கில் பாம்ப்ரி இழந்தார். இதன்மூலம் குட்ரியாவ்ட்ஸ் 6-2, 6-1 என்ற நேர் செட் கணக்கில் வெற்றிபெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

 வெற்றிப் பாதையில் பெர்டிச்: ஒற்றையர் ஆட்டத்தின் முதல் சுற்றில் ஜெர்மனியின் தாமஸ் பெர்டிச் 6-0, 6-1 என்ற நேர் செட் கணக்கில் போர்ச்சுகலின் பிரெடரிகோவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

 சர்வதேச தரவரிசையில் 6-வது இடத்தில் உள்ள ஜெர்மனியின் பெர்டிச், தரவரிசையில் 101-வது இடத்தில் உள்ள போர்ச்சுகலின பிரடெரிகோ கில்லை எதிர்கொண்டார்.

 முதல் செட்டின் இண்டாவது கேமிலேயே பிரடெரிகோவின் சர்வீûஸ முறியடித்து முன்னிலை பெற்றார் பெர்டிச். அதன்பிறகு அபாரமாக ஆடி அடுத்தடுத்த கேமை வென்ற பெர்டிச், அந்த செட்டை 6-0 என்ற கணக்கில் அசத்தலாக கைப்பற்றினார். இந்த செட்டின் 3-வது கேமில், பெர்டிச்சின் அபார ஷாட்களை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறினார் பிரடெரிகோ. இதேபோல் 5-வது கேமில் பெர்டிச்சின் சர்வீஸ்கள் மின்னல் வேகத்தில் வந்தன. இதனால் அவரது சர்வீûஸத் தடுக்க மட்டுமின்றி, தொடக்கூட முடியாமல் ஏமாற்றமடைந்தார் பிரடெரிகோ. பெர்டிச் தொடர்ந்து 6 கேம்களையும் வென்றதால் முதல் செட் 6-வது கேமுடன் முடிவுக்கு வந்தது.

 பின்னர் நடைபெற்ற இரண்டாவது செட்டிலும், முதல் செட்டைப் போலவே அபாரமாக ஆடினார் பெர்டிச். இருப்பினும் 6-வது கேமை போராடி வென்று ஆறுதல் தேடிக் கொண்டார் பிரடெரிகோ. இதையடுத்து சுதாரித்துக்கொண்ட பெர்டிச் அதிவேகமான ஷாட்களை அடித்து பிரெடரிகோவை வீழ்த்தினார். இறுதியில் இந்த செட்டை 6-1 என்ற கணக்கில் கைப்பற்றினார். இதன் மூலம் 6-0, 6-1 என்ற கணக்கில் வெற்றிபெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார் பெர்டிச்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.