அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடு கோயிலாக விளங்கும் சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில் சித்திரை பெருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே சுவாமிமலையில் சுவாமிநாத சுவாமி ஆலயம் அமைந்துள்ளது. முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடாக உள்ளது. இங்கு சித்திரைத் திருவிழா கடந்த 24-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் இன்று நடைபெற்றது.
தேரில் வள்ளி - தெய்வானையுடன் ஆறுமுகசாமி பக்தர்களுக்குக் காட்சியளித்தார். உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்து தேரினை முருக - முருக, அரோகரா அரோகரா என்று முழக்கம் இட்டவாறு தேரின் வடத்தைப் பிடித்து இழுத்து மகிழ்ந்தனர்.
Summary
The Chithirai Grand Festival's highlight—the Chariot Procession—took place at the Swamimalai Swaminatha Swamy Temple, which stands as the fourth of the six sacred abodes (Arupadai Veedu).
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

எட்டரை மாரியம்மன் கோயிலில் தேரோட்டம்

மதுரை கூடலழகர் கோயிலில் வைகாசி திருவிழா தேரோட்டம்!

வைகாசி விசாகம்: சுவாமிமலையில் திரளானோர் சுவாமி தரிசனம்!

பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோயிலில் தேரோட்டம்!
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK




