திருவையாறு ஐயாறப்பர் கோயிலில் சித்திரை விழா தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் தருமபுரம் ஆதீனத்திற்குச் சொந்தமான அறம் வளர்த்த நாயகி அம்மன் உடனுறை ஐயாறப்பர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும்.
இதேபோல் இந்த ஆண்டு கடந்த 21ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. விழாவில் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை தொடங்கியது. முன்னதாக சுவாமி, அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளி அருள்பாலித்தனர்.
பக்தர்கள் ஐயாறப்பா போற்றி, அறம் வளர்த்த நாயகியே போற்றி என கோஷங்களுக்கு இடையே வடம் பிடித்து முக்கிய வீதிகள் வழியாகத் தேரை இழுத்து வந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். வரும் இரண்டாம் தேதி சப்தஸ்தான விழா நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
The Chithirai festival chariot procession was celebrated with great grandeur at the Ayyarappar Temple in Thiruvaiyaru.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கோட்டை சங்கமேஸ்வரர் கோயிலில் தேரோட்டம்!

திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோயில் சித்திரை தேரோட்டம்!

கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோயிலில் ஏப். 30-ல் சித்திரைத் தேரோட்டம்!

தஞ்சை பெரிய கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு



