தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

திருநள்ளாறு கோயிலில் சனிப்பெயர்ச்சி விழா.. நேரலையில்!

சனிப்பெயர்ச்சி விழாவினை, பொதுமக்களும் பக்தர்களும் வீட்டிலிருந்தே காணும் வகையில், திருநள்ளாறு கோயில் நிர்வாகம் யூடியூப்பில் நேரலை ஒளிபரப்பை செய்திருக்கிறது.

News image

திருநள்ளாறு கோயிலில் சனிப்பெயர்ச்சி

Updated On :20 டிசம்பர் 2023, 12:23 pm


காரைக்கால்: சனிப்பெயர்ச்சி விழாவினை, பொதுமக்களும் பக்தர்களும் வீட்டிலிருந்தே காணும் வகையில், திருநள்ளாறு கோயில் நிர்வாகம் யூடியூப்பில் நேரலை ஒளிபரப்பை செய்திருக்கிறது.

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள திருநள்ளாற்றில் இன்று மாலை நடைபெறும் உலக பிரசித்தி பெற்ற சனிப்பெயர்ச்சி விழா-2023 உலகம் முழுவதும் உள்ள பொதுமக்கள் அனைவரும் வீட்டிலிருந்தே ஸ்ரீ சனீஸ்வர பகவான் அருள் பெற யூடியூப் லிங்க் மூலம் பார்க்க  காரைக்கால் மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. 

இந்த யூடியூப் லிங்க் மூலம்  பொதுமக்கள் அனைவரும் சனிப்பெயர்ச்சி நிகழ்வினைப் பார்த்து ஸ்ரீ சனீஸ்வர பகவான் அருள் பெற காரைக்கால் மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது. 

வாக்கியப் பஞ்சாங்கப்படி, மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு சனிபகவான் இன்று மாலை 5.20 மணிக்கு பெயர்ச்சியானார். இதையொட்டி, திருநள்ளாறு ஸ்ரீதா்பாரண்யேஸ்வரா் கோயிலில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வருகின்றன.

அனைவராலும் நேரடியாகக் கோயிலுக்குச் சென்று ஸ்ரீசனிபகவானை தரிசிக்க முடியாது என்பதால், கோயில் நிர்வாகம்,  நேரலையில் காணும்  ஏற்பாட்டினை செய்திருக்கிறது.

நளசக்கரவர்த்திக்கு ஏற்பட்ட தோஷம் விலக தர்பை காடாக இருந்த திருநள்ளாறுக்கு வந்து சுயம்புவாக தோன்றிய தர்பாரண்யேஸ்வரரை வணங்கி, தீர்த்தத்தில் நீராடி ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரரை வழிபட்டதால், அவருக்கு ஏற்பட்ட துன்பம் விலகி, அவர் இழந்ததையெல்லாம் மீட்டதாக வரலாறு. இக்கோயிலில் சனீஸ்வரபகவான் தனி சந்நிதி கொண்டு அருள்பாலிக்கிறார்.

திருநள்ளாறு ஸ்ரீதா்பாரண்யேஸ்வரா் கோயிலில் இன்று சனிப்பெயா்ச்சியின்போது ஸ்ரீசனீஸ்வர பகவானுக்கு நடக்கும் விசேஷ அபிஷேக, ஆராதனைகளை ஏராளமானோர் தொலைக்காட்சி வாயிலாகவும், யூடியூப் வாயிலாகவும் கண்டு பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.