திருப்பதி ஏழுமலையான் கோயிலில் புஷ்ப யாகம் நடைபெற உள்ளதால் அதற்கான டிக்கெட்டுகள் அக்.10 முதல் ஆன்லைனில் விற்பனை செய்யப்படுகிறது.
திருப்பதி வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த செப்.27-ம் தேதி தொடங்கி அக்டோபர் 5-ஆம் தேதி வரை கோலாகலமாக நடந்து முடிந்தது. பிரம்மோற்சவத்தில் நாடு முழுவதிலும் இருந்து 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
ஆண்டுதோறும் பிரம்மோற்சவத்திற்குப் பிறகு உற்சவ மூர்த்திகளுக்கு புஷ்ப யாகம் நடத்துவது ஐதீகம். பிரம்மோற்சவத்தின்போது அர்ச்சகர்களாலும், பக்தர்களாலும், சேவையில் பங்கு கொண்டவர்களாலும் அறிந்தோ அறியாமலோ ஏதேனும் குற்றம் குறை நிகழ்ந்திருப்பின், அதை சரி செய்ய இந்த புஷ்ப யாகத்தை தேவஸ்தானம் நடத்தி வருகிறது.
அந்தவகையில், நவம்பர் 1-ம் தேதி கார்த்திகை திருவோணம் நட்சத்திரத்தில் இந்தாண்டிற்கான புஷ்ப யாகம் நடத்தப்படுகிறது.
இதனிடையே, புஷ்ப யாகத்தில் பங்கேற்க விரும்பும் பக்தர்கள் அக்.10-ம் தேதி முதல் ஆன்லைனில் வெளியிடப்பட உள்ள டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்ளலாம் என்று திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தஞ்சாவூர் பெரிய கோயில் தேரோட்டம் கோலாகலம்!

நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!

வீட்டின் தரை மார்பிள் கல்லாக இருந்தால் தனிக்கவனம் அவசியம்!

ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

