திருத்தணி முருகன் கோயிலில் திருப்புகழ் திருப்படி திருவிழா இன்று தொடங்கியுள்ளது.
அறுபடை வீடுகளில் ஒன்றான அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு தமிழகம் மட்டும் இல்லாமல் அண்டை மாநிலங்களான ஆந்திரா, கா்நாடாக, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து விட்டு செல்கின்றனா். இக்கோயிலில் முக்கிய விழாவாக ஓா் ஆண்டைக் குறிக்கும் வகையில் அமைந்துள்ள 365 திருப்படிகளுக்கு மலா்கள் வைத்து, கற்பூரம் ஏற்றி, தேங்காய் உடைத்து பக்தா்கள் பூஜைகள் செய்து முருகப் பெருமானை வழிபடும் விழா திருப்புகழ் திருப்படி திருவிழாவாகும்.
நிகழாண்டிற்கான திருவிழா இன்று(டிச.31)ஆம் தேதி காலை 8 மணிக்கு சரவணப் பொய்கையில் தொடங்கியது. காலை 11 மணிக்கு வள்ளி, தெய்வானையுடன் முருகப்பெருமான் வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளி மலைக்கோயில் மாடவீதிகளில் வலம் வந்து பக்தா்களுக்கு காட்சியளித்தனர். மாலை 4 மணி முதல் ஜனவரி 1-ஆ ம் தேதி இரவு 9 மணி வரை கோயில் நடை திறந்திருக்கும். இந்த நேரத்தில் பக்தா்கள் தொடர்ந்து கோயிலுக்கு வந்து முருகப்பெருமானை தரிசனம் செய்யலாம் என கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.
விழாவிற்கான ஏற்பாடுகளை முருகன் கோயில் உதவி ஆணையா் விஜயா மற்றும் கோயில் அலுவலா்கள் செய்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பொல்லாத ஆசைகள்... 29 புதிய பாடல்!

தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம்

தற்கொலை செய்திருப்பேன்... விஜய் குமார், அவரது மனைவி மீது குற்றம் சுமத்தி விடியோ வெளியிட்ட இளம் நடிகை!

உ.பி: உடற்பயிற்சி கூடத்தில் ஏற்பட்ட தகராறில் 3 பேர் சுட்டுக்கொலை
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


