சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகரவிளக்கு பூஜைக்காக இன்று மாலை மீண்டும் கோயில் நடை திறக்கப்படுகிறது.
பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை நிறைவடைந்து டிச.27-ம் தேதி கோயில் நடை அடைக்கப்பட்டது.
இந்நிலையில் மண்டல பூஜையைத் தொடர்ந்து மகர விளக்கு பூஜை ஜனவரி 14-ம் தேதி நடைபெறவுள்ளது. மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட உள்ளது.
நாளை முதல் வழக்கம் போல் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்ட நெய்யபிஷேகம், உச்ச பூஜை, களபாபிஷேகம் உள்ளிடவை நடைபெறும். பிற்பகல் 1.30 மணிக்கு நடை அடைக்கப்பட்டு மீண்டும் மாலை 3 மணிக்கு நடை திறக்கப்படும். தொடர்ந்து தீபாராதனை, புஷ்பாபிஷேகம் உள்பட சிறப்பு வழிபாட்டுடன் இரவு 11.30 மணியளவில் நடை சாத்தப்படும்.
மகர விளக்கு பூஜை மற்றும் மகரஜோதி தரிசனம் வருகிற 14-ம் தேதி நடைபெறுகிறது. மகரவிளக்கு பூஜை சமயத்தில் தினசரி 90 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்படும். அதற்கான முன்பதிவை பக்தர்கள் செய்துகொள்ளலாம்.
இன்று முதல் ஜனவரி 20-ம் தேதி வரை கோயில் நடை திறந்திருக்கும் என்று சபரிமலை தேவசம் போர்டு அறிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பொல்லாத ஆசைகள்... 29 புதிய பாடல்!

தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம்

தற்கொலை செய்திருப்பேன்... விஜய் குமார், அவரது மனைவி மீது குற்றம் சுமத்தி விடியோ வெளியிட்ட இளம் நடிகை!

உ.பி: உடற்பயிற்சி கூடத்தில் ஏற்பட்ட தகராறில் 3 பேர் சுட்டுக்கொலை
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


