உலகப் பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை கார்த்திகை மகா தீபத் திருவிழாவை முன்னிட்டு இன்று அதிகாலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்பட்டது. இதையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்துள்ளனர்.
சிவனின் பஞ்சபூதத் தலங்களில் அக்னித்தலமான திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த நவம்பர் 27-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 7-ம் நாள் தேரோட்டம் மிக விமரிசையாக நடைபெற்றது.
திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் மிகச் சிறப்பு வாய்ந்தது பரணி தீபம். இது பல்லாயிரம் ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றது. இத்திருவிழாவின் உட்பொருளை நாம் அறிய வேண்டும்.
அங்கிங்கெனாதபடி எங்கும் எல்லா உயிர்களிடத்திலும் ஜீவனாக, ஒளியாக, திகழ்ந்து இருக்கின்ற அந்தப் பரம்பொருள் ஜோதியே எல்லாவற்றிற்கும் மூலம், ஆதாரம் என்று வழங்கப்படுகிறது. இந்த தீபஜோதியை பார்க்கும்போது எல்லாவற்றிற்கும் முதற்கடவுளாக இருக்கும் அந்த பரஞ்சோதி காலை 3.30 மணி அளவில் கருவறையில் கற்பூர தீபமேற்றி அனைத்து உலகத்தையும் காப்பது அந்த ஜோதிதான் என்பது போல் சிவாச்சாரியார்கள் வேத பாராயணம் ஓத, வேதமுழக்கத்தோடு அச்சுடரை அங்கே நெய் ஊற்றப்பட்டு தயாராக மண் மடக்கிலும் ஏற்றப்படுகிறது.
அதன் பிறகு முதலில் ஏற்றப்பட்ட மடக்குடன் வெளியே கொண்டு வரப்படுகிறது. ஒரு பரம்பொருள் ஐந்து மூர்த்திகளாக விளக்குவது தான் தீபத் திருநாளன்று காலையில் கருவறையில் ஏற்றப்படும் பரணி தீபம். பஞ்சமூர்த்திகளும், பஞ்ச சக்திகளுடன் இணைந்து செயல்படுவதனைக் காட்டுவதற்காக, அம்மன் கோயில் கருவறையில் ஐந்து அகல் விளக்குகள் ஏற்றப்படுகின்றன.
பிறகு இந்தச் சிவசக்தி மூர்த்தங்களிலிருந்து விரிவானதே எல்லா மூர்த்திகளும் என்பதனைக் காட்டுவதற்கு முதலில் விநாயகப் பெருமான் சன்னதி முதல் எல்லாச் சன்னதிகளிலும் தீபங்கள் ஏற்றப்படுகின்றன. இதுவே பரணி தீபத்தின் உட்பொருளாகும்.
லட்சக்கணக்கான மக்கள் கோயிலின் உள்வாளகத்தில் பரணி தீப தரிசனம் கண்டு அரோகரா, அரோகரா, அரோகரா என முழக்கமிட்டு இறைவடின வணங்கினர்.
இதைத்தொடர்ந்து, மாலை 6 மணிக்கு கோயில் தங்கக் கொடிமரம் எதிரே சிவபெருமான் அர்த்தநாரீஸ்வரராகக் காட்சியளிக்க, 2,668 அடி உயரமுள்ள திருவண்ணாமலை மலை மீது மகா தீபம் ஏற்றப்படுகிறது.
இதே நேரத்தில், கோயில் கொடிமரம் எதிரே உள்ள பெரிய அகண்டத்திலும் தீபம் ஏற்றப்பட்டு, பக்தி இன்னிசைக் கச்சேரி, வாணவேடிக்கைகள் நடைபெறுகின்றன.
இதையடுத்து, இரவு 10 மணிக்கு தங்க ரிஷப வாகனத்தில் உண்ணாமுலையம்மன் உடனுறை அருணாசலேஸ்வரர் வீதியுலாவும், இதர வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் வீதியுலாவும் நடைபெறுகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சாய் சுதர்சன் அரைசதம் விளாசல்; குஜராத் டைட்டன்ஸுக்கு 4-வது வெற்றி!

பயங்கரவாதிகளுக்கு பிரியாணி கொடுக்கிறது காங்கிரஸ், திரிணமூல் : அமித் ஷா
கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிராக லக்னௌ பந்துவீச்சு!

ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கியின் 4வது காலாண்டு லாபம் 5% உயர்வு!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


