எமதர்மனின் உதவியாளரான சித்திர குப்த நாயனார் பூமியில் மக்களின் நடவடிக்கைகள் ஒவ்வொன்றையும் இரவு, பகலாக அனுதினமும் கண்காணித்து அவரவர் நன்மை, தீமை கணக்குகளுக்கு ஏற்ப அவரவர் சொர்க்க, நரக விதிகளை எழுதிச் செல்கிறார் என்பது ஒரு நம்பிக்கை. புராணக் குறிப்புகளின் படி சித்திர குப்த நாயனார் என்பவர் பிரம்மாவிலிருந்து நேரடியாகத் தோன்றியவர் எனவும், சூரியன், நீலா தேவிக்கு பிறந்த மைந்தன் எனவும் இரு வேறு விதமான கருத்துகள் நிலவுகின்றன. இது தவிர யமதர்மனின் வேண்டுகோளுக்கு இணங்க சிவ, பார்வதி அருளால் சித்திரத்திலிருந்து, சித்திரா பெளர்ணமித் திருநாளில் உதித்த குமாரன் தான் சித்திர குப்தன் எனவும் சில கதைகள் உண்டு. வட நாட்டில் இப்போதும் சில பிராந்தியங்களில் சித்திர குப்தரின் வம்சாவளியினர் குறிப்பிட்ட மேலும் அவர் தமது கைகளில் ஏடும், எழுத்தாணியும் ஏந்தியவராகவே ஓவியங்களிலும், கோயில் சிற்பங்களிலும் சித்தரிக்கப் பட்டுள்ளார் என்பதால் அவரது ஜென்ம தினமான இன்று மாணவர்கள் அவரை வழிபட்டால் சிறந்த பலன் கிடைக்கும் என ஜோதிட நூல்கள் கூறுகின்றன.