ஐப்பசி மாதம் அதாவது துலா ஸ்தானத்தில் சூரியன் நீச்சம் பெரும் கால கட்டத்தில் சூரிய ஒளியிழந்து அதன் வேகம் குறைவாக இருக்கும். சூட்சமனாக சொல்லப்போனால் சூரியன் நீச்சம் பெரும்பொழுது மனதில் குழப்பம் சரியான முடிவு எடுக்கமுடியாது நிலை ஏற்படும். மருத்துவ ரீதியாக பார்க்கப்போனால் ஒருவர் பல கஷ்டங்களை மனதில் வைத்து புழுங்கி பலவித நோய்களை முக்கியமாக பக்கவாதம், இதயத்தில் பிரச்னை, மூளையில் பாதிப்பு, கருச்சிதைவு என்று தொடரும். இதிலிருந்து நாம் விடுபெற சுக்கிரன் வீட்டில் சூரியன் பிரவேசிக்கும் காலகட்டத்தில் சஷ்டி பூஜை செய்து அறுபடை வீடான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், திருவாவினன்குடி (பழனி), திருவேரகம் (சுவாமிமலை), திருத்தணி, பழமுதிர்சோலை அல்லது அருகில் உள்ள முருகர் கோவிலுக்குச் சென்று அவரவர் பாரத்தை இறக்கி வைத்து வந்தால் மன அமைதி கிட்டும்.
ஏன் நாம் முருகரை தேடுகிறோம். ஜாதகருக்கு பலத்தைக் கூட்ட சிவனின் முகங்களான சத்யோஜாதம், வாமதேவம், தத்புருஷம், ஈசானம், அகோரம், அதோமுகம் ஆகிய ஆறு முகங்கள் வாயிலாகத் தோன்றிய நெருப்புப் பொறிகளை ஒன்று சேர்ந்து உருவமான ஆறுமுக கடவுளை வேண்டும்பொழுது எல்லாவித சக்திகளையும் நாம் பெறமுடியும் என்பது நிதர்சனமான உண்மை.
சூரிய ஒளி குறைவான அந்த மாதத்தில் வரும் வளர்பிறை சஷ்டியில் முருகனைப் பூஜித்தால் முக்கியமாக காலபுருஷ தத்துவப்படி சூரிய வீடான சிம்மம் 5ம் பாவமும் மற்றும் சூரியன் அமர்ந்திருக்கும் 7ம் பாவத்தையும் உயர்த்தப்படும் என்பது சூட்சம கருத்து. இந்த பாவங்களின் என்ன பலம் என்று கேட்கின்றீர்களா குழந்தை இல்லாதவருக்கு மக்கட் செல்வத்தையும், திருமணத் தடை உள்ளவர்களுக்கு திருமணம் சிறப்பான முறையிலும் நடைபெறும், நோய் நம்மை விட்டுச் சென்றுவிடும் மற்றும் கேட்ட வரம் அனைத்தும் கிட்டும்.
அதையே நம் சித்தர்கள் கூறிய "சட்டியிலிருந்தால்தான் அகப்பையில் வரும்" என்ற பாடலை பார்ப்போம். இவற்றின் ஒருசாரர் விளக்கம் என்னவென்றால் "ஒருவன் உணவால் மட்டும் தன் உடல் வலிமை பெற முடியாது, அவற்றுடன் மனம் மற்றும் ஒழுக்கம் கூடிய மன சுத்தத்தைப் பெரும்பொழுது வலிமை பெறும். அதோடு அவனுடைய அகப்பையான மனதிலும் வலிமை பெற்று உடல் பூராவும் ஆற்றல் பெருகும்”.
இதே பாடலின் மற்றொரு சாரார் கருத்து சட்டி என்பது சஷ்டியிலிருந்தால், அகப்பையில் அதாவது கருவில் குழந்தை உருவாகும். இவற்றை கண்கூட நிறையபேர் பெற்ற பலன் ஆகும். இதில் சூட்சமாக விரதம் மூலம் உடலை தூய்மை பெற்று அதன் பிறகு அதிபலம் பெறுவது என்பது அர்த்தம். அதுவும் வளர்பிறை காலங்களில் சுபர்களுக்கு பலம் அதிக ஆற்றல் பெறுவார்கள். அதனால் ஐப்பசி மாதத்தில் வரும் அமாவாசை அடுத்த நாள் சுக்கிலபட்ச பிரதமை முதல் சஷ்டி வரை உள்ள ஆறு நாட்களும் விரதம் இருந்து உடலை சுத்தம் செய்து பின்பு உடலை பலம் பெறுவது என்பது அர்த்தம். அதனால் குழந்தையில் இல்லாதவர்களுக்கு கருப்பையில் (அகப்பை) குழந்தை பாக்கியத்தைத் தருவான் நம் கந்தன்.
பொதுவாக சஷ்டி திதி என்பது புதிய நண்பர்களை சந்தித்தல், கொண்டாட்டம், வேலைக்கு சேர, பசுமாடு வாங்க, வீடு வாங்க, வாகனம் வாங்க, மருந்து தயாரிக்க நன்று என்று கூறப்படுகிறது. இந்த திதி நன்மை தீமை இரண்டும் சரி பாதியாக நிகழும். இந்த திதிகளில் பசுவிற்கு தானம் செய்வது மிகவும் சிறந்தது. ஐப்பசியில் அடைமழையில் நீர்நிலை பெருகும், பொன்னும் பொருளும் மேல் மேல் வளரும் என்று கூற்று. இங்கு ஆறு எண்ணுக்குரிய சுக்கிரன் வீட்டில் தான் சூரியன் நீச்சம் பெறுகிறார்.
இக்காலகட்டத்தில் காவிரி நதியின் குளித்து, காவிரி நடுவில் வீற்றிருக்கும் சுக்கிர ஸ்தலம் ஸ்ரீரெங்கநாதனை தரிசிக்கலாம். கந்த சஷ்டி விரதம் என்பது ஒரு வரைமுறை உள்ளது. இருந்தாலும் இந்த சஷ்டியில் ஆறு நாட்களும் விரதம் இருக்க முடியாதவர்கள் கந்தசஷ்டி கடைசி நாளாவது உங்களுக்கு அருகாமையில் உள்ள நீர்நிலையில் குளித்து, விரதம் மேற்கொண்டு, முருகனை பூஜை செய்தல் உங்கள் கஷ்டம் சூரனை அழித்தொழித்தது போல உங்களை விட்டு சென்றுவிடும். இந்த நாட்களில் அவரை தினம்தோறும் போற்றுவோம் எல்லாருக்கும் தெரிந்த கந்த சஷ்டி கவசத்தை சந்தோஷமாக ரசித்து பாடுவோம்.
துதிப்போர்க்கு வல்வினைபோம் துன்பம்போம் நெஞ்சில்
பதிப்போர்க்கு செல்வம் பலித்துக் கதித்தோங்கும்
நிஷ்டையும் கைகூடும் நிமலனருள்
கந்தர் சஷ்டி கவசம் தனை.
அமரரிடர் தீர வமரம் புரிந்த
குமரனடி நெஞ்சே குறி
சஷ்டியை நோக்கச் சரவணபவனார்
சிஷ்டருக்குதவும் செங்கதிர் வேலோன்
பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை
கீதம் பாடக் கிண்கிணியாட
மையல் நடம் செய்யும் மயில்வாகனனார்…
குருவே சரணம்
- ஜோதிட சிரோன்மணி தேவி
Whats app: 8939115647
Email:vaideeshwra2013@gmail.com
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
திலக் அதிரடி, அஸ்வினி அசத்தல்; மும்பை அபாரம்!
இன்டர் காசியை வீழ்த்தியது பஞ்சாப் எஃப்சி!

நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!

தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


