தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

குரியன்விளை ஸ்ரீ பத்ரகாளி கோயிலில் நட்சத்திர மகாயாகம் இன்று தொடக்கம்

களியக்காவிளை அருகேயுள்ள குரியன்விளை ஸ்ரீ பத்ரகாளி முடிப்புரையில் நட்சத்திர மகா யாகம் ஞாயிற்றுக்கிழமை (ஏப். 19) தொடங்கி 7 நாள்கள் நடைபெறுகிறது.

News image
Updated On :18 ஏப்ரல் 2015, 6:56 am

களியக்காவிளை அருகேயுள்ள குரியன்விளை ஸ்ரீ பத்ரகாளி முடிப்புரையில் நட்சத்திர மகா யாகம் ஞாயிற்றுக்கிழமை (ஏப். 19) தொடங்கி 7 நாள்கள் நடைபெறுகிறது.

விழாவையொட்டி முதல்நாள் காலை 5 மணிக்கு அஷ்டதிரவிய மகா கணபதிஹோமம் நடைபெறுகிறது. மாலை 4.30 மணிக்கு பாறசாலை மகாதேவர் கோயிலில் இருந்து தீப ஊர்வலமும், காராளி புதுக்குளம் மகாதேவர் கோயிலில் இருந்து காவடிகளும் ஊர்வலமாக கோயிலுக்கு கொண்டுவரப்படுகிறது. தீப ஊர்வலத்தை கொல்லம் மாதா அமிர்தானந்தமயி மடம் பிரசன்னாமிர்த சைதன்யா தொடக்கி வைக்கிறார். அன்றைய தினம் இரவு 8 மணிக்கு நடைபெறும் தொடக்க விழாவை மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தொடங்கி வைக்கிறார். தொடர்ந்து இரவு 10.30 மணிக்கு யாகசாலையில் தீபம் ஏற்றப்படுகிறது.

ஏப். 20 முதல் ஏப். 24 ஆம் தேதி வரை காலை 5.30 மணி முதல் 10.30 மணி வரை பஞ்சபூத ஷப்தவிம்ஷத்தி நட்சத்திர மகாயாகம் நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து கலசாபிஷேகம் நடைபெறும். விழா நாள்களில் தினமும் காலையில் கணபதி ஹோமம், மதியம் 12.30 மணிக்கு சமூகவிருந்து, இரவு கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். ஏப். 25 ஆம் தேதி காலை 8.30 மணிக்கு சமூக பொங்காலை நடைபெறும். மதியம் 12.30 மணிக்கு பூப்படையும், தொடர்ந்து வேதாளபீடத்தில் குருசி பூஜையுடன் விழா நிறைவடைகிறது.

விழா குறித்து கோயில் நிர்வாக தலைவர் ஜெ. விக்ரமன்சுவாமி தெரிவித்ததாவது:

இக் கோயிலில் அசுவினி முதல் ரேவதி வரையிலான 27 நட்சத்திரங்களுக்கும், இவற்றின் தலைமை நட்சத்திரமான அபிஜித் நட்சத்திரத்துக்கும் என 28 ஹோம குண்டங்கள் தனித்தனியாக அமைக்கப்பட்டு யாக பூஜைகள் நடத்தப்படுகிறது. இந்த யாகம் இக்கோயிலில் தொடர்ந்து 12 வருடங்கள் நடத்தப்பட உள்ளது. இந்த யாகத்தில் சிதம்பரம் நடராஜர் கோயில், ராமேஸ்வரம், திருநள்ளாறு, திருப்பதி, திருச்செந்தூர் பகுதியைச் சேர்ந்த வேதவிற்பனர்கள் பங்கேற்கிறார்கள். மேலும் சிதம்பரம் நடராஜர் கோயிலில் இருந்து தீட்சிதர்களால் மகா கும்பம் கொண்டு வரப்படுகிறது. இந்த யாகம் உலக நன்மைக்காகவும், நாட்டில் அமைதி, சமாதானம் நிலவ வேண்டியும் மேற்கொள்ளப்படுகிறது என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.