நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

கனிந்த வாழ்வு

மனநலன், உடல் நல ஆலோசனைகளுடன், முதியோருக்கு வரும் நோய்களுக்கான காத்துகொள்வதற்கான விழிப்புணர்வு வழிகாட்டியாக இந்த நூல் உள்ளது.

News image
Updated On :15 ஜூன் 2026, 6:06 pm IST

கனிந்த வாழ்வு - முனைவர் என்.பத்ரி; பக்.152; ரூ.200; பென்பேர்டு பப்ளிகேஷன்ஸ், ✆ 82200 63246.

கல்வித் துறையில் 50 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றவரான நூலாசிரியர் ஆராய்ச்சியாளரும்கூட! இவர் முதியோர் சங்கத்தின் 'எல்டர்ஸ்' மாத இதழில் வெளியான 35 கட்டுரைகளைத் தொகுத்து நூலாக்கியுள்ளார். கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறை மாறி தனிக்குடித்தனங்கள் பெருகிவிட்ட நிலையில், முதியோர் தனியே வசிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இதனால், முதியோர் இல்லங்கள் பெருகியுள்ளன. இவர்கள் தனித்து வாழும்போது ஏற்படும் சவால்கள், சிக்கல்கள், நோய்கள், பிரச்னைகளை எப்படி சமாளிப்பது என்பதை அறிய உதவும் கட்டுரைகளே இந்த நூலில் இடம்பெற்றுள்ளன.

கால் தடுமாற்றத்தால் கீழே விழுதல், நினைவாற்றால் இழப்பு, மன-மலச் சிக்கல்கள், கால் பராமரிப்பு, உடல் உபாதைகள், உடல் பருமன், கண்கள் பாதுகாப்பு, மருத்துவப் பிரச்னைகள், கோடைகால பராமரிப்பு, குடல் நலன், நீரின் அவசியம், கவலைகள் போன்றவற்றுக்கான தகவல்கள் நூல் முழுவதும் விரவிக் கிடக்கின்றன.

முதுமையை மென்மையாகக் கடத்தல், சமூக நலனுக்கான சமூக ஊடகங்கள், ஜப்பானியர்களைப் போல் இளமையுடன் வாழ்தல், சுறுசுறுப்பாக இருத்தல், மருத்துவக் காப்பீட்டின் அவசியம், வாழ்க்கையை ரசித்து வாழ்தல், பொருளாதாரக் குற்றங்களுக்கான தீர்வு, நட்பின் அவசியம், உணவும் உறக்கமும், இளமையுடன் இருக்க முயற்சித்தல், தேவையை உணர்தல், இறுதி வரை இயங்குதல், நேர்மறை உணர்வின் அவசியம்... என்று முதுமையை நினைத்து வருந்தாமல், இளையத் தலைமுறையினரைப் போல் நினைத்துக்கொண்டு இயங்குவதற்கான வழிமுறைகளை நூலாசிரியர் எடுத்துரைக்கிறார்.

முதியோர்களும், எதிர்காலத்தில் முதியோர் ஆகவுள்ள இளைய தலைமுறையினரும் படித்தறிய வேண்டிய தகவல்கள் உள்ளன. மனநலன், உடல் நல ஆலோசனைகளுடன், முதியோருக்கு வரும் நோய்களுக்கான காத்துகொள்வதற்கான விழிப்புணர்வு வழிகாட்டியாக இந்த நூல் உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.