ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

சங்கரய்யா நல்லகண்ணு - நூற்றாண்டு கண்ட செஞ்சட்டை போராளிகள்

நூற்றாண்டு கண்ட செஞ்சட்டை போராளிகளான சங்கரய்யா, நல்லகண்ணு ஆகியோர் குறித்து சுருக்கமாக விவரிக்கிறது.

Published On :10 ஆகஸ்ட் 2026, 6:55 pm IST

சங்கரய்யா நல்லகண்ணு-நூற்றாண்டு கண்ட செஞ்சட்டை போராளிகள்- ஜெகாதா; பக்.204; ரூ.215; ஸ்ரீபாரதி பப்ளிகேஷன்ஸ்; சென்னை-600033. ✆ 99523 35505.

நூற்றாண்டு கண்ட செஞ்சட்டை போராளிகளான சங்கரய்யா, நல்லகண்ணு ஆகியோர் குறித்து சுருக்கமாக விவரிக்கிறது. சுதந்திரம், மக்கள் உரிமை, தொழிலாளர் நலன், வறுமை ஒழிப்பு, ஜாதி ஒழிப்பு என பலவற்றில் களமாடிய தோழர் சங்கரய்யா, சமூகத்துக்கு அளித்த பங்களிப்பை எவராலும் குறைத்து மதிப்பிட முடியாது.

சுயமரியாதை இயக்கம் மீது ஈடுபாடு கொண்டிருந்த அவர், 17 வயதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் உருவாக முக்கிய காரணியாக இருந்தவர் என அவரைப் பற்றி விவரித்துக் கொண்டே போகலாம்.

அதேவேளையில், 15 வயதில் பொதுவுடைமை கொள்கையால் ஈர்க்கப்பட்டு, 18 வயதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டவர் நல்லகண்ணு. 100 வயதைக் கடந்தாலும், உடல்நிலை ஒத்துழைத்திருந்தால் மக்களுக்காக போராட்டக் களத்தில் நின்றிருக்கக் கூடிய உன்னத தலைவர் அவர். அவரின் தியாக வாழ்வு குறித்து சென்னை உயர்நீதிமன்றம் பாராட்டி கூறிய வார்த்தைகளை எவராலும் மறுக்க முடியாது.

'திராவிட இயக்கம் தோன்றாதிருந்தால், பெரியாரும் அண்ணாவும் இல்லாமல் போயிருந்தால், நான் நல்லகண்ணு மற்றும் சங்கரய்யா அருகில் கம்யூனிஸ்ட்டாக அமர்ந்திருப்பேன்' என்பது

கருணாநிதி சொன்ன வார்த்தைகள். அவரின் வார்த்தைகள் இருவரும் எந்த அளவுக்கு ஒப்பற்றத் தலைவர்கள் என்பதை புரிந்துகொள்ள மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளது.

'சமூக வேள்வியில் சிக்கிக்கொண்டு மீளமுடியாமல் தவிக்கும் மக்களை விடுவிக்க, ஒவ்வொரு தேசத்திலும் சில விடிவெள்ளிகள் தோன்றுவர். அவர்களில் ஒருவர்தான் சங்கரய்யா' என்று நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர் மட்டுமல்ல ஐயா நல்லகண்ணும் விடிவெள்ளிதான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.