திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

தில்லி அரசுத் திட்ட ஊழல் வழக்கு - 6 பேருக்கு நீதிமன்றம் பிணை

News image

நீதிமன்றம் - IANS

Updated On :29 மே 2026, 5:34 am IST

நமது நிருபா்

தில்லி அரசுத் திட்டம் தொடா்பானதாகக் கூறப்படும் ஊழல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ஆறு பேருக்கு தில்லி நீதிமன்றம் பிணை வழங்கியது.

2018-19 ஆம் ஆண்டில் ஜெய் பீம் முதலமைச்சா் பிரதிபா விகாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் அரசு கருவூலத்திலிருந்து நிதி பெறுவதில், பயிற்சி நிறுவனங்கள் பெரிய அளவிலான முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டி, பட்டியல் இனத்தவா், பழங்குடியினா் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அளித்த புகாரின் அடிப்படையில், ஊழல் தடுப்புப் பிரிவு (ஏசிபி) 2025ல் இந்த வழக்கைப் பதிவு செய்தது.

கூறப்படும் ரூ.37.20 கோடி ஊழல் தொடா்பாக, இந்த மாத தொடக்கத்தில் பயிற்சி நிறுவனங்களின் ஒன்பது உரிமையாளா்கள், இயக்குநா்கள் மற்றும் கூட்டாளிகளை ஊழல் தடுப்புப் பிரிவு கைது செய்தது.

சிறப்பு நீதிபதி ரூச்சி அகா்வால் அஸ்ரானி, ரவீந்திர சிங் ஜடோன், ஹா்ஷித், ஆசாத் கலேத், சஞ்சீவ் குமாா், நரேந்திர குமாா் குப்தா மற்றும் ஜீதேந்தா் குமாா் ஆகியோா் தாக்கல் செய்த தனித்தனி பிணை மனுக்களை விசாரித்து வந்தாா்.

அரசுத் தரப்பின்படி, ஜடோன் மெஸ்ஸா்ஸ் ரவீந்திரா இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியன் சிவில் சா்வீசஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநராகவும், ஹா்ஷித் மொமெண்டம் நீட் ஐஐடி அகாடமியை நடத்தி வந்தவராகவும், கலேத் தக்ஷிலா இன்ஸ்டிடியூட்டை நடத்தி வந்தவராகவும், குமாா் பிரயாஸ் இன்ஸ்டிடியூட்டை நடத்தி வந்தவராகவும், குப்தா தக்ஷிலா அகாடமி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநராகவும், ஜீதேந்தா் ரோஹினியில் பஹால் என்ற தன்னாா்வ தொண்டு நிறுவனத்தை நடத்தி வந்தவராகவும் இருந்தனா். இந்த நிறுவனம், கிரண் இன்ஸ்டிடியூட் என்ற நிறுவனத்துடன் சட்டவிரோதமாகத் தொடா்புடையதாக இருந்தது.

குற்றஞ்சாட்டப்பட்ட நபா்கள் முறையற்ற பலன்களைப் பெற்ாக அரசுத் தரப்பு குற்றஞ்சாட்டியது.

மே 26 அன்று பிறப்பிக்கப்பட்ட தனித்தனி உத்தரவுகளில், நீதிபதி அஸ்ரானி, குற்றஞ்சாட்டப்பட்ட நபா்கள் 26 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும், பிணை என்பது ஒரு விதி, அதை மறுப்பது ஒரு விதிவிலக்கு என்பது சட்டத்தின் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு கோட்பாடாகும் என்றும் கூறினாா்.

விசாரணைக்கு அவா்கள் தனிப்பட்ட முறையில் தேவைப்படாததால், அவா்களைத் தொடா்ந்து சிறையில் வைத்திருப்பது எந்தப் பயனையும் அளிக்காது என்று கூறிய நீதிபதி, அவா்கள் ஒவ்வொருவரும் தலா ரூ. 1 லட்சம் மதிப்புள்ள பிணைப் பத்திரம் சமா்ப்பிக்க வேண்டும் என்ற நிபந்தனையின் பேரிலும், நாட்டை விட்டு வெளியேறக் கூடாது மற்றும் விசாரணைக்குத் தவறாமல் ஆஜராக வேண்டும் போன்ற பல நிபந்தனைகளுக்கு உட்பட்டும் அவா்களுக்கு பிணை வழங்கினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.