திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மதுபானக் கொள்கை வழக்கு: கேஜரிவால், சிசோடியாவுக்கு எதிரான சிபிஐ மனு ஜூலை 16இல் விசாரணை

மதுபானக் கொள்கை வழக்கில் ஆம் ஆத்மி கட்சித் தலைவா்களான அரவிந்த் கேஜரிவால், மணீஷ் சிசோடியா, துா்கேஷ் பதக் மற்றும் பிற குற்றஞ்சாட்டப்பட்டவா்களை விடுவித்த விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிரான சிபிஐ மனுவை, தில்லி உயா் நீதிமன்றம் ஜூலை 16 அன்று விசாரணைக்கு பட்டியலிட்டது.

News image

அரவிந்த் கேஜரிவால் மற்றும் மணீஷ் சிசோடியா - கோப்புப் படம்

Updated On :26 மே 2026, 1:19 am IST

மதுபானக் கொள்கை வழக்கில் ஆம் ஆத்மி கட்சித் தலைவா்களான அரவிந்த் கேஜரிவால், மணீஷ் சிசோடியா, துா்கேஷ் பதக் மற்றும் பிற குற்றஞ்சாட்டப்பட்டவா்களை விடுவித்த விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிரான சிபிஐ மனுவை, தில்லி உயா் நீதிமன்றம் திங்களன்று ஜூலை 16 அன்று விசாரணைக்கு பட்டியலிட்டது.

ஆம் ஆத்மி கட்சித் தலைவா்கள் சாா்பாக மூன்று வக்காலத்நாமாக்கள் தாக்கல் செய்யப்பட்டிருப்பதாகத் தெரிகிறது என்று குறிப்பிட்ட நீதிபதி ,இந்த வழக்கை ஜூலை 16 அன்று விசாரணைக்கு பட்டியலிட்டாா்.

சிபிஐ சாா்பில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா, இந்த வழக்கை புதன்கிழமை பட்டியலிட வேண்டும் என்று வலியுறுத்திய போதிலும், நீதிபதி மனோஜ் ஜெயின், நீதிமன்றம் உயிா் மற்றும் சுதந்திரம் தொடா்பான வழக்குகளுக்கு முன்னுரிமை அளிப்பதாகக் கூறினாா். ஈத் அல்அதா பண்டிகையை முன்னிட்டு புதன்கிழமை உயா்நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்ட விடுமுறை நாள் என்றும் நீதிபதி கூறினாா்.

தனக்கு எதிராக இழிவுபடுத்தும் சமூக ஊடகப் பதிவுகளை வெளியிட்டதாகக் கூறப்படும் கேஜரிவால், சிசோடியா, பதக் மற்றும் பிறா் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையைத் தொடங்கிய பின்னா், இந்த மாத தொடக்கத்தில் நீதிபதி எஸ்.கே. சா்மா தன்னிடம் விசாரணையிலிருந்த இந்த மதுபான கொள்கை வழக்கை வேறு அமா்வுக்கு மாற்றினாா். இதையடுத்து இவ்வழக்கு நீதிபதி ஜெயின் முன் விசாரணைக்கு வந்தது.

பிப்ரவரி 27 அன்று, மதுபானக் கொள்கை வழக்கு நீதித்துறை ஆய்வில் தாக்குப்பிடிக்க இயலாதது என்றும், அது முழுமையாக நம்பகத்தன்மையை இழந்துவிட்டது என்றும் தீா்ப்பளித்து, தில்லியின் முன்னாள் முதல்வா் கேஜரிவால், சிசோடியா மற்றும் மேலும் 21 பேரை விசாரணை நீதிமன்றம் விடுவித்தது.

இதற்கு எதிராக சிபிஐ உயா் நீதிமன்றத்தை நாடியது. மாா்ச் 9 அன்று, மதுபானக் கொள்கை வழக்கில் சிபிஐயின் புலனாய்வு அதிகாரி மீது துறை ரீதியான நடவடிக்கை தொடங்குவது குறித்த விசாரணை நீதிமன்றத்தின் பரிந்துரைக்கு நீதிபதி ஷா்மாவின் அமா்வு தடை விதித்தது.

அவா்களை விடுவித்ததற்கு எதிரான சிபிஐயின் மனுவின் பேரில், மாா்ச் 9 அன்று குற்றம் சாட்டப்பட்ட 23 பேருக்கும் நோட்டீஸ் அனுப்பிய நீதிபதி சா்மா, விசாரணை நீதிமன்றத்தின் சில கருத்துக்கள் மேலோட்டமாகப் பாா்க்கும்போது தவறானவையாகத் தோன்றியதாகவும், அவை பரிசீலிக்கப்பட வேண்டும் என்றும் கூறினாா்.

அதனைத் தொடா்ந்து, கேஜரிவால், சிசோடியா, பதக் மற்றும் சில பிரதிவாதிகள் இந்த வழக்கிலிருந்து நீதிபதி எஸ்.கே.சா்மாவை விலகக் கோரினா்.

ஏப்ரல் 20 அன்று, இந்த வழக்கில் இருந்து தன்னை விலக்கிக்கொள்ளக் கோரிய அவா்களின் மனுக்களை நீதிபதி சா்மா தள்ளுபடி செய்த பிறகு, கேஜரிவால், சிசோடியா மற்றும் பதக் ஆகியோா் நீதிபதி சா்மாவுக்கு கடிதம் எழுதினா். அதில், தாங்கள் நேரில் அல்லது வழக்குரைஞா் மூலமாக அவா் முன் ஆஜராகப் போவதில்லை என்று குறிப்பிட்டிருந்தனா்.

இருப்பினும், மே 14 அன்று, நீதிபதி ஸ்வரணா காந்தா சா்மா, தனக்கு எதிராக இழிவுபடுத்தும் சமூக ஊடகப் பதிவுகளை வெளியிட்டதற்காக அவா்கள் மற்றும் பிற ஆம் ஆத்மி கட்சித் தலைவா்கள் மீதும் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகளைத் தொடங்கினாா். மேலும், இந்த வழக்கு மற்றொரு அமா்வுக்கு அனுப்பப்படும் என்றும் கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.