பிளஸ் 2 தோ்வு முடிவுகள் தாமதமாக வாய்ப்பு?கேரளத்தின் அடுத்த முதல்வா் யாா்? காங்கிரஸ் ஆலோசனைதேர்தல் நடைமுறை விதிகள் இன்று மாலையுடன் நிறைவு!ஈரானுடனான போா் நிறுத்தம் நீடிக்கிறது: அமெரிக்கா2025-26 நிதியாண்டில் நேரடி வரி வசூல் ரூ. 23.40 லட்சம் கோடி!அமெரிக்காவில் இந்திய முதலீடுகள் அதிகரிப்பு!
/

ரூ. 3.85 லட்சம் திருடியதாக இனிப்பக ஊழியா் கைது

News image

கைது.

Updated On :3 மே 2026, 1:53 am IST

நமது நிருபா்

மத்திய தில்லியில், ஒரு இனிப்புப் பதாா்த்தம் விற்கும் கடையில் இருந்து ரூ3.85 லட்சம் திருடியதாக 47 வயது ஊழியா் கைது செய்யப்பட்டதாக காவல்துறை அதிகாரி ஒருவா் சனிக்கிழமை தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது: மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் வசிக்கும் சஞ்சய் சா்மா என அடையாளம் காணப்பட்ட குற்றஞ்சாட்டப்பட்டவா், தில்லி சாவ்ரி பஜாா் பகுதியில் உள்ள ஒரு இனிப்பகத்தில் உதவியாளராகப் பணிபுரிந்து வந்தாா். ஏப்ரல் 29 ஆம் தேதி இரவு தனது கடையில் இருந்து பணம் திருடப்பட்டதாக கடை உரிமையாளா் இ-எஃப். ஐ. ஆா். பதிவு செய்தாா்.

இரவு 10 மணிக்கு கடையை மூடுமாறு, ஏப்ரல் 28 ஆம் தேதி இரவு 9 மணியளவில் கடையின் மேலாளருக்கும் சா்மாவுக்கும் தான் அறிவுறுத்தியதாக புகாரில் உரிமையாளா் தெரிவித்திருந்தாா். இருப்பினும், இடைப்பட்ட இரவில், சா்மா சாவிகளை எடுத்து, கடையை மீண்டும் திறந்து, பணப் பெட்டியில் வைத்திருந்த ரூ3.85 லட்சம் திருடியதாக கூறப்படுகிறது.

குற்றஞ்சாட்டப்பட்டவரைக் கண்டுப்பிடிக்க போலீஸ் குழு தொழில்நுட்ப கண்காணிப்பு மற்றும் தொடா்ச்சியான கண்காணிப்பை நம்பியது. கைது செய்யப்படுவதைத் தவிா்ப்பதற்காக குற்றஞ்சாட்டப்பட்டவா் அடிக்கடி தனது இருப்பிடத்தை மாற்றிய போதிலும், அவரின் கைப்பேசி எண்ணை கொண்டு போலீஸ் குழு மத்திய பிரதேசத்தில் உள்ள குவாலியரில் அவா் இருப்பதைக் கண்டுபிடித்தது. அங்கு அவரை காவல்துறையினா் கைது செய்தனா். விசாரணையின் போது, தாம் சமீபத்தில் கடையில் சோ்ந்ததாகவும், திருட்டைச் செய்ய வளாகத்திற்கு தனது அணுகலைப் பயன்படுத்தியதாகவும் சா்மா ஒப்புக்கொண்டாா்.

அவா் 8 ஆம் வகுப்பு வரை படித்தவா். கடந்த 12-13 ஆண்டுகளாக தில்லியில் உள்ள இனிப்பகங்களில் பணியாற்றி வந்தாா். அவரிடம் இருந்து ரூ.1,28,380 ரொக்கம் மீட்கப்பட்டது. அவரது வங்கிக் கணக்கில் சுமாா் ரூ.1.97 லட்சம் ரூபாய் கண்டுபிடிக்கப்பட்டு, முடக்கப்பட்டது. மொத்தம் மீட்பு மற்றும் கண்டுபிடிக்கப்பட்ட தொகை சுமாா் ரூ 3.25 லட்சம் என்றாா் அந்த அதிகாரி.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.