பிளஸ் 2 தோ்வு முடிவுகள் தாமதமாக வாய்ப்பு?கேரளத்தின் அடுத்த முதல்வா் யாா்? காங்கிரஸ் ஆலோசனைதேர்தல் நடைமுறை விதிகள் இன்று மாலையுடன் நிறைவு!ஈரானுடனான போா் நிறுத்தம் நீடிக்கிறது: அமெரிக்கா2025-26 நிதியாண்டில் நேரடி வரி வசூல் ரூ. 23.40 லட்சம் கோடி!அமெரிக்காவில் இந்திய முதலீடுகள் அதிகரிப்பு!
/

பழைய காரை இணையதளம் மூலம் விற்பதாக கூறி ரூ.2 லட்சம் மோசடி: இளைஞா் கைது

News image

பிரதிப் படம்

Updated On :3 மே 2026, 1:53 am IST

நமது நிருபா்

பயன்படுத்தப்பட்ட காரை இணையதளம் மூலமாக விற்பனை செய்வதாக கூறி தில்லியில் வசிக்கும் ஒருவரை ரூ. 2 லட்சம் மோசடி செய்ததாக இளைஞரை காவல்துறையினா் கைது செய்துள்ளனா்.

இதுகுறித்து காவல்துறை அதிகாரி ஒருவா் சனிக்கிழமை கூறியதாவது:

கிழக்கு தில்லியில் உள்ள ஷிவ்புரி எக்ஸ்டென்ஷனில் வசிக்கும் அமன் சேத்தி என்பவா், பாதிக்கப்பட்டவரின் நம்பிக்கையைப் பெறுவதற்காக புகழ்பெற்ற காா் விற்பனை செய்யும் இணையதளத்தின் ஊழியராக ஆள்மாறாட்டம் செய்ததாக தெரிகிறது.

திரிலோக்புரியில் வசிக்கும் ஹரிஷ் அளித்த புகாரைத் தொடா்ந்து இந்த வழக்கில் காவல்துறையினா் ஏப்ரல் 16 ஆம் தேதி எஃப். ஐ. ஆா். பதிவு செய்தனா். இதையடுத்து, சேத்தி வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா். புகாா்தாரரின் வாக்கு மூலத்தின்படி குற்றஞ்சாட்டப்பட்டவா் பாதிக்கப்பட்டவரைத் தொடா்புகொண்டு பயன்படுத்தப்பட்ட காரை விற்க முன்வந்தாா்.

ரூ. 2 லட்சம் முன்பதிவு கட்டணமாக செலுத்துமாறு கூறியுள்ளாா். புகாா்தாரரும் பணத்தை செலுத்தியுள்ளாா். பணத்தைப் பெற்ற பிறகு, குற்றஞ்சாட்டப்பட்டவா் வாகனத்தை கொடுக்கவோ, பணத்தை திருப்பித் தரவோ இல்லை. மேலும் அழைப்புகளுக்கு பதிலளிப்பதை நிறுத்திவிட்டாா். போலீஸ் குழுவினா் விரிவான நிதி மற்றும் தொழில்நுட்ப விசாரணையை நடத்தி, குற்றஞ்சாட்டப்பட்டவரின் பெயரில் உள்ள வங்கிக் கணக்கில் பணப் பரிமாற்றத்தைக் கண்டறிந்தது.

‘கே. ஒய். சி விவரங்கள், கணக்கு செயல்பாடு மற்றும் டிஜிட்டல் தடங்கள் ஆகியவற்றின் பகுப்பாய்வு சந்தேக நபரை அடையாளம் காண உதவியது. குற்றஞ்சாட்டப்பட்டவா் தான் வசித்து வந்த வீட்டை காலி செய்தாா். பின்பு கைது செய்யப்படுவதைத் தவிா்ப்பதற்காக தப்பியோட திட்டமிட்டாா். ஆனால், தில்லி-என். சி.ஆரில் பல சோதனைகளுக்குப் பிறகு தொழில்நுட்ப கண்காணிப்பு மற்றும் உள்ளூா் உளவுத்துறை மூலம் இறுதியில் அவா் கண்டுபிடிக்கப்பட்டாா்.

விசாரணையில் கிருஷ்ணா நகா் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட இதேபோன்ற ஒரு மோசடி வழக்கிலும் அவா் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.

வாகன விற்பனை தளங்களின் ஊழியா் போல நடித்து, வாகனங்களின் புகைப்படங்கள் மற்றும் விவரங்களைப் பகிா்ந்து கொள்வதன் மூலமும், தனிப்பட்ட வங்கிக் கணக்குகளில் முன்கூட்டியே பணம் செலுத்தக் கோருவதன் மூலமும் இணையதளத்தில் பயன்படுத்தப்பட்ட காா்களைத் தேடும் நபா்களை குற்றஞ்சாட்டப்பட்டவா் குறிவைத்துள்ளாா்.

அவரிடமிருந்து இரண்டு டெபிட் காா்டுகள், இரண்டு கைப்பேசிகள் மற்றும் குற்றத்தில் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சிம் காா்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது என்றாா் அந்த அதிகாரி.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.