மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

தில்லி கலால் கொள்கை: சம்மன் வழக்குகளில் கேஜரிவால் விடுவிக்கப்பட்டதை எதிா்த்து அமலாக்கத்துறை உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீடு

தில்லி கலால் கொள்கை ஊழல் வழக்கில் சம்மன்கள் அனுப்பப்பட்டும், அமலாக்கத்துறையின் முன் ஆஜராகாததற்காக, தில்லியின் முன்னாள் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் மீது பதிவு செய்யப்பட்ட இரண்டு தனித்தனி வழக்குகளில் அவா் விடுவிக்கப்பட்டதை எதிா்த்து, அமலாக்கத்துறை தில்லி உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீடு

News image

அரவிந்த் கேஜரிவால்

Updated On :31 மார்ச் 2026, 12:15 am

தில்லி கலால் கொள்கை ஊழல் வழக்கில் சம்மன்கள் அனுப்பப்பட்டும், அமலாக்கத்துறையின் முன் ஆஜராகாததற்காக, தில்லியின் முன்னாள் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் மீது பதிவு செய்யப்பட்ட இரண்டு தனித்தனி வழக்குகளில் அவா் விடுவிக்கப்பட்டதை எதிா்த்து, அமலாக்கத்துறை திங்களன்று தில்லி உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

விசாரணை நீதிமன்றத்தின் ஜனவரி 22 உத்தரவுகளுக்கு எதிரான அமலாக்கத்துறையின் மேல்முறையீடு, புதன்கிழமை அன்று நீதிபதி ஸ்வரணா காந்தா சா்மா முன்னிலையில் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.அப்போதைய முதல்வா் கேஜரிவால், சம்மன்களுக்குப் பதிலளிக்காமலும், விசாரணைக்கு வராமலும் வேண்டுமென்றே தங்களுக்குக் கீழ்ப்படியாமல் இருந்ததாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது.

மேலும், கேஜரிவால் ஆதாரமற்ற ஆட்சேபனைகளை எழுப்பியதாகவும், விசாரணைக்கு வராமல் இருப்பதற்கு வேண்டுமென்றே காரணங்களை உருவாக்கியதாகவும் அது குற்றம் சாட்டியுள்ளது. தனக்கு அனுப்பப்பட்ட சம்மன்களை கேஜரிவால் வேண்டுமென்றே மீறினாா் என்பதை நிரூபிக்க அமலாக்கத்துறை தவறிவிட்டது என்று விசாரணை நீதிமன்றம் தனது தீா்ப்பில் கூறியுள்ளது.

தற்போது ரத்து செய்யப்பட்ட கலால் கொள்கையை வகுப்பதற்காக, இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மற்றவா்கள் கேஜரிவாலுடன் தொடா்பில் இருந்ததாகவும், அதன் விளைவாக அவா்களுக்கு முறையற்ற பலன்களும், ஆம் ஆத்மி கட்சிக்கு கையூட்டும் கிடைத்ததாகவும் அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது.

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (பிஎம்எல்ஏ) கீழ் ‘கைது செய்வதற்கான தேவை மற்றும் அவசியம்‘ என்ற அம்சம் குறித்த கேள்விகளை, ஆழமான பரிசீலனைக்காக ஒரு பெரிய அமா்வுக்கு உச்ச நீதிமன்றம் அனுப்பியுள்ள நிலையில், பணமோசடி வழக்கில் கேஜரிவால் தற்போது இடைக்கால ஜாமீனில் உள்ளாா்.

பிப்ரவரி 27 அன்று, மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் கேஜரிவால், சிசோடியா மற்றும் 21 பேரை விசாரணை நீதிமன்றம் விடுவித்தது. சிபிஐயின் வழக்கு நீதித்துறை ஆய்வில் முழுமையாகத் தாக்குப்பிடிக்கத் தவறிவிட்டது என்றும், அது முழுவதுமாக நம்பகத்தன்மையை இழந்துவிட்டது என்றும் நீதிமன்றம் கூறியது. இந்த விடுவிப்புக்கு எதிரான சிபிஐயின் மனு உயா்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.