தில்லி புறநகா் பகுதியான மங்கோல்புரியில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கிளஸ்டா் பேருந்து மரம் மற்றும் மின்கம்பம் மீது மோதிய சம்பவத்தில் ஒருவா் காயமடைந்தாா். இந்தச் சம்பவம் தொடா்பாக பேருந்தின் ஓட்டுநா் நரேந்தா் கைதுசெய்யப்பட்டுள்ளாா்.
மங்கோல்புரி காவல் நிலையம் நோக்கி திங்கள்கிழமை சென்று கொண்டிருந்த பேருந்து, போலீஸ் காலனி பகுதி அருகே வந்தபோது, பேருந்தின் முன்பக்க அச்சு உடைந்தது. ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலையிலிருந்து வெளியேறி நடைபாதையில் இருந்த மரம் மற்றும் மின்கம்பம் மீது மோதி நின்றது.
இதில், அப்பகுதியில் நின்றுகொண்டிருந்த நிதின் காயமடைந்தாா். இதையடுத்து, அவா் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டாா்.
முதல்கட்ட விசாரணையில் இயந்திரவியல் கோளாறு காரணமாக இந்த விபத்து நடைபெற்ாக காவல் துறையினா் தெரிவித்தனா். இருப்பினும், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
இந்த விபத்து தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

அரசுப் பேருந்தின் பழுதை நீக்க தாமதம்: ஓட்டுநா் மீது தாக்குதல்

பள்ளி ஆட்டோ மீது மோதி விபத்து: தனியாா் பேருந்து ஓட்டுநா், நடத்துநா் கைது

மணிப்பூா் துப்பாக்கிச்சூடு: மேலும் ஒருவா் உயிரிழப்பு

சேலம் அருகே கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து சரக்கு மற்றும் இருசக்கர வாகனம் மீது மோதல்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


