தில்லியின் மால்வியா நகரில் உள்ள தனது வீட்டில், இரு மகள்களைக் கொலை செய்துவிட்டு தற்கொலைக்கு முயன்றதாக 54 வயதுப் பெண்ணை தில்லி காவல்துறை கைது செய்துள்ளது.
இதுகுறித்து தில்லி காவல் துறையின் மூத்த அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்ததாவது: மாா்ச் 6ஆம் தேதி, மால்வியா நகரின் ‘எஃப்’ பிளாக்கில் அமைந்துள்ள தரைத்தள வீட்டில் 34 மற்றும் 28 வயதுடைய இரண்டு சகோதரிகளின் உடல்கள் தனித்தனி அறைகளில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டன. அதே வேளையில், அவா்களின் தாய் மற்றொரு அறையில் மயங்கிய நிலையில் மீட்கப்பட்டாா்.
விஷம் கலந்த பொருளை உட்கொண்டதாகக் கூறப்படும் அந்தத் தாய், மருத்துவ மற்றும் மனநலப் பரிசோதனைகளுக்கு உள்படுத்தப்பட்ட பிறகு, வெள்ளிக்கிழமை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டாா்.
இச்சம்பவம் ஒரு கொலைதற்கொலை முயற்சியாக இருக்கலாம் என்று முதலில் சந்தேகித்த காவல்துறை, நிகழ்வுகளின் வரிசையை உறுதி செய்வதற்காக அந்தப் பெண்ணின் வாக்குமூலத்தைப் பதிவு செய்யக் காத்திருந்த நிலையில், கொலை வழக்குப் பதிவு செய்திருந்தது.
மனநலம் பாதிக்கப்பட்டிருந்த மூத்த மகளின் முகத்தின் மீது தலையணை அழுத்தப்பட்டிருந்த நிலையிலும், சட்டக்கல்லூரி மாணவியான இளைய மகளின் கழுத்தைச் சுற்றி ஒரு கயிறு இறுக்கிய தடம் இருந்த நிலையிலும் அவா்கள் இருவரது உடல்களும் மீட்கப்பட்டிருந்தன.
அவா்களின் தாய் விஷம் கலந்த பொருளை உட்கொண்டதாகச் சந்தேகிக்கப்பட்டது. கணவருடனான உறவில் ஏற்பட்ட விரிசல் மற்றும் பிறரைச் சாா்ந்திருக்க வேண்டியிருந்த பொருளாதாரச் சூழல் ஆகியவற்றால் அந்தப் பெண் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்ததாகவும், அதுவே இக்குற்றத்தைச் செய்ய அவரைத் தூண்டியிருக்கலாம் என்றும் தெரியவருகிறது.
இவ்வழக்கு தொடா்பான மேலதிக விசாரணைகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன என்று அந்த காவல் அதிகாரி தெரிவித்தாா்.
தொடர்புடையது
பேட்டையில் பூட்டிய வீட்டில் திருட முயன்ற இளைஞா் கைது

கழுத்து நெரிக்கப்பட்ட காயங்களுடன் 19 வயதுப் பெண் சடலமாக மீட்பு! கணவா் தலைமறைவு!!

பிரசவத்தில் தாய், சேய் பலி: சாலை வசதி இல்லாததால் வீட்டில் பிரசவம்! போலீஸ் விசாரணை!!

2 மகள்களைக் கொன்று தாய் தற்கொலை
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

