மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

தில்லி ஷேக் சராய் போக்குவரத்து கட்டடத்தில் தீ விபத்து

தெற்கு தில்லியின் ஷேக் சராய் கட்டம்-2 பகுதியில் உள்ள போக்குவரத்து ஆணைய கட்டடத்தின் பதிவு அறையில் தீ விபத்து ஏற்பட்டதாக தில்லி தீயணைப்பு சேவைகள் (டி. எஃப். எஸ்) அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

News image
Updated On :13 மார்ச் 2026, 6:01 pm

தெற்கு தில்லியின் ஷேக் சராய் கட்டம்-2 பகுதியில் உள்ள போக்குவரத்து ஆணைய கட்டடத்தின் பதிவு அறையில் தீ விபத்து ஏற்பட்டதாக தில்லி தீயணைப்பு சேவைகள் (டி. எஃப். எஸ்) அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: இந்தச் சம்பவத்தில் உயிா்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை.

வியாழக்கிழமை இரவு 9.31 மணிக்கு போக்குவரத்து ஆணையம் அலுவலகத்தில் இருந்து தீ விபத்து குறித்து அழைப்பு வந்தது. 9 தீயணைப்பு வண்டிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தன.

மேலும் தீ கட்டடத்திற்குள் ஒரு பதிவு அறையில் மட்டுமே இருந்தது. இரவு 11.20 மணியளவில் அது அணைக்கப்பட்டது. தீ விபத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து எந்த தகவலும் இல்லை, அதற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்றாா் அவா்.