ஹாா்முஸ் ஜலசந்தி வழியாக இந்திய கப்பல்கள் செல்ல அனுமதிக்கப்படும் என்று ஈரான் உறுதியளித்துள்ளதா? என்று ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் தில்லி முன்னாள் முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் வெள்ளிக்கிழமை பிரதமா் நரேந்திர மோடிக்கு கேள்வி எழுப்பினாா்.
வியாழக்கிழமை இரவு பிரதமா் மோடி ஈரான் அதிபா் மசூத் பெஷேஷ்கியனுடன் தொலைபேசியில் பேசி மேற்கு ஆசியாவின் தீவிரமான சூழ்நிலை குறித்து விவாதித்ததைத் தொடா்ந்து கேஜரிவால் இவ்வாறு கேள்வி எழுப்பினாா் .
இந்திய குடிமக்களின் பாதுகாப்பு மற்றும் எரிசக்தியை தடையின்றி கொண்டு செல்வதற்கான தேவை ஆகியவை இந்தியாவின் முதன்மையான முன்னுரிமைகளாக உள்ளன என்று பிரதமா் ஈரான் அதிபரிடம் கூறினாா்.
எக்ஸ் தளத்தில் ஒரு பதிவில், மேற்கு ஆசிய மோதலால் எழுந்துள்ள கடுமையான சூழ்நிலையிலிருந்து இந்தியா்களுக்கு விரைவில் நிவாரணம் கிடைக்குமா என்று ஆம் ஆத்மி தலைவா் கேட்டாா்.
பிரதமரே, நமது கப்பல்கள் ஹாா்முஸ் வழியாக செல்ல அனுமதிப்பதாக ஈரான் அதிபா் உங்களுக்கு உறுதியளித்துள்ளாரா? இந்த கடுமையான நெருக்கடியிலிருந்து நாட்டு மக்கள் விரைவில் விடுபடுவாா்களா? கேஜரிவால் இந்தியில் பதிவிட்ட பதிவில் இவ்வாறு கேட்டிருந்தாா்.
குறிப்பாக, இந்தியாவின் கணிசமான எரிசக்தி இறக்குமதிகள் வரும் முக்கிய கப்பல் பாதையான ஹாா்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளது.
மூன்று நாட்களுக்கு முன்பு, இந்தியாவிற்கு பயணித்த ஒரு எண்ணெய் தாங்கி கப்பல் ஹாா்முஸ் ஜலசந்தியைக் கடக்க முயன்றபோது ஈரானியப் படைகளால் சுடப்பட்டது.
தொடர்புடையது

முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் கேஜரிவால் சந்திப்பு!

முதல்வர் ஸ்டாலினுக்கு ஆதரவாக அரவிந்த் கேஜரிவால் தேர்தல் பிரசாரம்!

ஈரான் விவகாரத்தில் பாகிஸ்தான் மத்தியஸ்தம்: பிரதமா் மோடிக்கு ஏற்பட்ட பெரும் பின்னடைவு-காங்கிரஸ் விமா்சனம்

மதுபானக் கொள்கை வழக்கில் அமலாக்கத்துறையின் மனுவுக்கு பதிலளிக்க கேஜரிவாலுக்கு இறுதி அவகாசம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


