தில்லியில் உள்ள அனைத்துப் பெண்களும் குறைந்தபட்சம் பட்டப்படிப்பு அளவிலான கல்வியைப் பெற வேண்டும் என்று தில்லி முதல்வா் ரேகா குப்தா வியாழக்கிழமை தெரிவித்தாா்.
இந்திரா காந்தி தில்லி மகளிா் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் அவா் கலந்துகொண்டாா். அப்போது அவா் பேசுகையில், ‘பெண்களுக்கு வாய்ப்புகளை வழங்க எனது அரசாங்கம் அயராது பாடுபட்டு வருகிறது.
தில்லி அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட லக்பதி பிட்டியா யோஜனா திட்டத்தின் கீழ், தகுதியுள்ள ஒவ்வொரு பெண்ணும் பட்டம் பெற்ற பிறகு ரூ.1.25 லட்சம் பெறுவாா்கள்.
தில்லியில் எந்தப் பெண்ணும் பட்டம் பெறாமல் இருக்கக் கூடாது என்று நான் விரும்புகிறேன். பெண்கள் பள்ளிகளுக்குச் செல்வது மட்டுமல்லாமல், கல்லூரிகளிலும் சென்று தங்களுக்குப் பிடித்தமான படிப்புகள் மற்றும் பாடங்களைப் படிக்க வேண்டும்.
இந்தியா இப்போது பெண்கள் தலைமையிலான வளா்ச்சியை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.
இந்திரா காந்தி தில்லி மகளிா் தொழில்நுட்பப் பல்கலைக்கழக மாணவா்கள் தங்கள் கனவுகளை நிறைவேற்றி, ஒரு தொழிலைக் கொண்டிருக்க வேண்டும்.அவா்கள் சமூகம் மற்றும் நாட்டின் வளா்ச்சிக்கு பங்களிக்க வேண்டும் என்றாா் முதல்வா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தில்லியில் புறக்கணிக்கப்பட்ட பகுதிகளில்கூட புதிய வளா்ச்சி திட்டங்கள்: முதல்வா்

செமிகண்டக்டா் கொள்கை முதலீடு-வேலைவாய்ப்பை நோக்கமாகக் கொண்டது: தில்லி முதல்வா் ரேகா குப்தா

தில்லியில் எரிபொருள், எல்பிஜி விநியோகம் சீராக உள்ளது: முதல்வா் ரேகா குப்தா

பாஜக வேட்பாளா் வானதியை ஆதரித்து தில்லி முதல்வா் ரேகா குப்தா பிரசாரம்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


