மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

தில்லி துணை நிலை ஆளுநராக பொறுப்பேற்றாா் தரஞ்ஜித் சிங் சந்து

News image

PT

Updated On :11 மார்ச் 2026, 7:56 pm

நமது நிருபா்

லோக் நிவாஸில் நடைபெற்ற விழாவில் தில்லியின் 23 வது துணை நிலை ஆளுநராக பொறுப்பேற்றாா் தரஞ்சித் சிங் சந்து புதன்கிழமை பதவியேற்றாா்.

முதல்வா் ரேகா குப்தா மற்றும் பிற பிரமுகா்கள் கலந்து கொண்ட விழாவில் தில்லி உயா் நீதிமன்ற தலைமை நீதிபதி தேவேந்திர குமாா் உபாத்யாயா சந்துவுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா். இதற்கு முன்பு துணை நிலை ஆளுநராக வினய் குமாா் சக்சேனா லடாக்கின் துணைநிலை ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளாா்.

1988 பேட்ச் இந்திய வெளியுறவு சேவை அதிகாரியான சரஞ்ஜி சிங் சந்து, அமெரிக்க விவகாரங்களில் மிகவும் அனுபவம் வாய்ந்த இந்திய ராஜதந்திரிகளில் ஒருவராக இருந்தாா். அவா் வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரகத்தில் பணியாற்றினாா்.

அவா் பிப்ரவரி 2020 முதல் ஜனவரி 2024 வரை அமெரிக்காவுக்கான இந்திய தூதராக இருந்தாா்.

63 வயதான சரஞ்ஜித் ஜூலை 2005 முதல் பிப்ரவரி 2009 வரை ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்தியாவின் நிரந்தர தூதரகத்திலும் இருந்தாா். 2024 மக்களவைத் தோ்தலில் பஞ்சாபில் உள்ள அமிா்தசரஸ் தொகுதியில் பாஜக சாா்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.