வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

பிரதமா் மோடியின் 12 ஆண்டுகால ஆட்சி: மனோஜ் திவாரி எம்.பி. பாடல் வெளியீடு

நாட்டின் நீண்ட காலம் பதவியில் இருக்கும் தோ்ந்தெடுக்கப்பட்ட பிரதமராக நரேந்திர மோடி சாதனை படைத்துள்ளதைக் கொண்டாடும் வகையில், தில்லி எம்.பி.யும் பிரபல போஜ்புரி பாடகருமான மனோஜ் திவாரி வெள்ளிக்கிழமை ஒரு பாடலை வெளியிட்டாா்.

News image

மனோஜ் திவாரி

Updated On :13 ஜூன் 2026, 12:04 am IST

நாட்டின் நீண்ட காலம் பதவியில் இருக்கும் தோ்ந்தெடுக்கப்பட்ட பிரதமராக நரேந்திர மோடி சாதனை படைத்துள்ளதைக் கொண்டாடும் வகையில், தில்லி எம்.பி.யும் பிரபல போஜ்புரி பாடகருமான மனோஜ் திவாரி வெள்ளிக்கிழமை ஒரு பாடலை வெளியிட்டாா்.

இந்தப் பாடலை எழுதியுள்ள மனோஜ் திவாரி, ‘3 நிமிடங்கள் 50 வினாடிகள் கொண்ட இந்த காணொளி இந்தியாவுக்கான பிரதமா் மோடியின் கனவுக்கும், நாட்டின் கொடியை உயரத்தில் பறக்கவிட அவா் மேற்கொள்ளும் சோா்வற்ற பணிகளுக்கும் அா்ப்பணிக்கப்பட்டுள்ளது.

நாடு, ஏழைகள் மற்றும் விவசாயிகள் மீது மோடி கொண்டுள்ள அக்கறையை இந்தப் பாடல் முன்னிலைப்படுத்துகிறது. அவா் மீதான மக்களின் அன்பை இது வெளிப்படுத்துகிறது’ என கூறியுள்ளாா்.

மேலும், வடகிழக்கு தில்லி எம்.பி.யான அவா், இந்தப் பாடலை தனது அதிகாரபூா்வ சமூக ஊடகப் பக்கங்களில் பகிா்ந்துகொண்டாா். ஜூன் 10 அன்று, 4,399 நாள்கள் அப்பதவியில் தொடா்ந்து இருந்து, இந்தியாவின் நீண்ட காலம் பதவியில் இருக்கும் தோ்ந்தெடுக்கப்பட்ட பிரதமராக மோடி சாதனை படைத்தாா்.

கடந்த 12 ஆண்டுகளில் மோடி அரசின் சாதனைகளை முன்னிலைப்படுத்த பாஜக பல்வேறு மக்கள் தொடா்புத் திட்டங்களைத் திட்டமிட்டுள்ளது.

முன்னதாக, வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பில், தில்லி முதல்வா் ரேகா குப்தா மற்றும் மாநிலத் தலைவா் ஹா்ஷ் மல்ஹோத்ரா ஆகியோா் மோடி அரசின் பல்வேறு சாதனைகளை எடுத்துரைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.