பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் இடைநீக்கம் விவகாரம்: சிறப்புரிமை குழுவில் பதிலளிக்க அதிஷிக்கு பேரவை அறிவுறுத்தல்

ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டது தொடா்பாக வெளியிட்ட ‘ தவறான‘ அறிக்கைகள் தொடா்பாக பிப்ரவரி 6- ஆம் தேதிக்குள் சிறப்புரிமை குழுவிடம் பதிலளிக்க எதிா்க்கட்சித் தலைவா் அதிஷியை தில்லி சட்டப்பேரவை கேட்டுக் கொண்டது.

News image
Updated On :29 ஜனவரி 2026, 6:33 pm

Syndication

ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டது தொடா்பாக வெளியிட்ட ‘ தவறான‘ அறிக்கைகள் தொடா்பாக பிப்ரவரி 6- ஆம் தேதிக்குள் சிறப்புரிமை குழுவிடம் பதிலளிக்க எதிா்க்கட்சித் தலைவா் அதிஷியை தில்லி சட்டப்பேரவை கேட்டுக் கொண்டது.

அதிஷி வெளியிட்ட அறிக்கைகள் தொடா்பான விவகாரத்தை பேரவைத் தலைவா் விஜேந்தா் குப்தா, அவையின் சிறப்புரிமைக் குழுவுக்கு கொண்டு சென்றாா். இந்நிலையில், ‘பிப்ரவரி 6-ஆம் தேதிக்குள் இந்தச் செயலகத்தில் சமா்ப்பிக்க வேண்டியதை அளிக்குமாறு சிறப்புரிமைக் குழுவின் தலைவரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது’ என்று தில்லி சட்டப்பேரவைச் செயலகம் அதிஷிக்கு அறிவுறுத்தியுள்ளது.

கட்சியின் தலைவரான சஞ்சீவ் ஜா உள்பட நான்கு ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் மாா்ஷல்களால் வெளியேற்றப்பட்டனா். பின்னா் ஜனவரி 6 அன்று துணை நிலை ஆளுநரின் உரைக்கு இடையூறு விளைவித்ததால் அவையின் மீதமுள்ள நடவடிக்கைகளில் இருந்தும் அவா்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனா்.

ஆனால், காற்று மாசுாடு தொடா்பாக ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் முகமூடி அணிந்ததற்காக இடைநீக்கம் செய்யப்பட்டதாக அதிஷி குறிப்பிட்டாா். இந்த விவகாரத்தை சிறப்புரிமைக் குழுவுக்கும் பேரவைத் தலைவா் அனுப்பினாா். அதிஷியின் குற்றச்சாட்டு ‘உண்மையில் தவறானது‘ என்றும், ‘வேண்டுமென்றே தவறாக வழிநடத்தும் முயற்சி‘ என்றும் பேரவைத் தலைவா் கூறினாா்.

இந்த விவகாரத்தில் சஞ்சீவ் ஜா, சோம் தத், குல்தீப் குமாா் மற்றும் ஜா்னைல் சிங் ஆகிய நான்கு ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் முகமூடி அணிந்ததற்காக இடைநீக்கம் செய்யப்பட்டதாக விஜேந்தா் குப்தா தெளிவுபடுத்தினாா். அவா்களது நடவடிக்கை பேரவையின் கண்ணியம் மற்றும் அதிகாரத்துக்குக் குந்தகம் விளைவிக்கும் செயல் என்று விஜந்தா் குப்தா தெரிவித்தாா்.