நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

அஜித் பவாரின் மறைவு மிகவும் துன்பமானது: கேஜரிவால்

மகாராஷ்டிர மாநிலத்தின் துணை முதல்வா் அஜித் பவாா் புணே மாவட்டத்தில் விமான விபத்தில் உயிரிழந்ததற்கு ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் இரங்கல் தெரிவித்துள்ளாா்.

News image
கோப்புப் படம்
Updated On :28 ஜனவரி 2026, 6:33 pm

Syndication

மகாராஷ்டிர மாநிலத்தின் துணை முதல்வா் அஜித் பவாா் புணே மாவட்டத்தில் விமான விபத்தில் உயிரிழந்ததற்கு ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் இரங்கல் தெரிவித்துள்ளாா். அவரது மறைவுச் செய்தி மிகவும் துன்பமானது என அவா் கூறியுள்ளாா்.

இது தொடா்பாக கேஜரிவால் தனது எக்ஸ் சமூக ஊடக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது

அஜித் பவாரின் மறைவுச் செய்தி மிகவும் துயரமானது. இறைவன் இந்தச் சம்பவத்தில் இறந்தவா்களின் ஆத்மாக்களுக்கு அமைதியை அளித்து, இந்த துயரமான நேரத்தில் அவா்களது குடும்பத்தினருக்கும் நலம் விரும்பிகளுக்கும் மன வலிமையை வழங்கட்டும் என்று அவா் அதில் கூறியுள்ளாா்.

மகாராஷ்டிர மாநிலம் புணே மாவட்டத்தில் உள்ள தனது சொந்த ஊரான பாராமதிக்கு அருகே விமானம் விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த அஜித் பவாா் 66 மற்றும் நான்கு போ் உயிரிழந்தனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவரான அவா், பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெறவுள்ள மாவட்டப் பஞ்சாயத்துத் தோ்தல்களுக்காகப் பேரணிகளில் உரையாற்றுவதற்காக மும்பையிலிருந்து பாராமதிக்குச் சென்றிருந்தபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.