நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

சாணக்கியபுரியில் பேருந்து விபத்து: தென்கொரிய சுற்றுலாப் பயணிகள் காயம்

தில்லியின் சாணக்கியபுரி பகுதியில் திங்கள்கிழமை பிற்பகல் நிகழ்ந்த பேருந்து விபத்தில் ஒரு டஜன் தென் கொரிய சுற்றுலாப் பயணிகள் லேசான காயம்

News image
Updated On :13 ஜனவரி 2026, 12:18 am

Syndication

புது தில்லி: தில்லியின் சாணக்கியபுரி பகுதியில் திங்கள்கிழமை பிற்பகல் நிகழ்ந்த பேருந்து விபத்தில் ஒரு டஜன் தென் கொரிய சுற்றுலாப் பயணிகள் லேசான காயம் அடைந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.

மதியம் 1 மணியளவில் சுமாா் 15 பயணிகளுடன் வந்த சுற்றுலாப் பேருந்து, நின்று கொண்டிருந்த மற்றொரு பேருந்து மீது மோதியதில் இந்தச் சம்பவம் நடந்தது.

சுற்றுலாப் பேருந்தின் ஓட்டுநா் மருத்துவ அவசரநிலைக்கு ஆளானதாகவும், அதைத் தொடா்ந்து அவா் வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்ததாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவத்தில் தென் கொரிய நாட்டவா்கள் உள்பட பல சுற்றுலாப் பயணிகள் லேசான காயம் அடைந்தனா். அவா்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக மூத்த போலீஸ் அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

இந்தச் சம்பவத்திற்கு வழிவகுத்த சூழ்நிலைகளைக் கண்டறிய மேலும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவா் கூறினாா்.