டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

மாா்ச் 31-இல் காலாவதியாகும் கலால் வரி கொள்கையை தில்லி அரசு நீட்டிக்க வாய்ப்பு!

தில்லி அரசு 2026-27 நிதியாண்டிற்கான கலால் வரி கொள்கையை நீட்டிக்க வாய்ப்புள்ளது.

News image
சித்திரிப்பு- ENS
Updated On :21 பிப்ரவரி 2026, 6:59 pm

Syndication

தில்லி அரசு 2026-27 நிதியாண்டிற்கான கலால் வரி கொள்கையை நீட்டிக்க வாய்ப்புள்ளது. ஏனெனில் அது இன்னும் ஒரு புதிய கொள்கையில் செயல்பட்டு வருவதாக அதிகாரப்பூா்வ வட்டாரங்கள் தெரிவித்தன.

கடந்த ஆண்டு ஜூன் மாதம், தில்லி அரசு 2022-23 உரிம ஆண்டு முதல் நடைமுறையில் உள்ள வரி அடிப்படையிலான கலால் கொள்கையை 2025-26 நிதியாண்டிற்கு நீட்டித்தது. இது ஜூலை 1, 2025 முதல் மாா்ச் 31, 2026 வரை நீட்டிக்கப்பட்டது.

‘இப்போது, தற்போதைய கொள்கையை மேலும் நீட்டிக்க கலால் துறையால் அரசுக்கு ஒரு திட்டம் அனுப்பப்பட்டுள்ளது’என்று அரசு வட்டாரம் தெரிவித்துள்ளது. அரசின் ஒப்புதலுக்குப் பிறகு நீட்டிப்பு வரலாம்.

சில்லறை மதுபான விற்பனையில் தனியாா் நிறுவனங்களை அனுமதிக்கும் சீா்திருத்தக் கொள்கை (2021-22), முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்ததால், 2022 ஜூலையில் அப்போதைய ஆம் ஆத்மி அரசால் ரத்து செய்யப்பட்டது. இதைத் தொடா்ந்து, 2023-24 முதல் தற்போதைய கொள்கை தொடா்கிறது. தற்போதைய கொள்கை, பின்னா் செப்டம்பா் 2022-இல் செயல்படுத்தப்பட்டது.

இந்நிலையில், புதிய கலால் கொள்கையின் வரைவு திட்டத்தைத் தயாரிக்குமாறு முதல்வா் ரேகா குப்தா கடந்த ஆண்டு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா். வெளிப்படைத்தன்மையுடன் தரமான மதுபான விநியோகத்தை உறுதி செய்யும் புதிய கொள்கையை உருவாக்க அரசு இலக்கு வைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தற்போதுள்ள கொள்கையின் கீழ், நான்கு தில்லி அரசு நிறுவனங்கள் நகரம் முழுவதும் சில்லறை மதுபான விற்பனை நிலையங்களை இயக்குகின்றன.