டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

உ.வே.சாமிநாத ஐயா் பிறந்த தினம்: குடியரசு துணைத்தலைவா் புகழாரம்

ஓலைச்சுவடிகளில் உறங்கிக்கிடந்த பண்டைத் தமிழ் இலக்கியங்களை மீட்டெடுத்து, நம் கைகளில் தவழச் செய்தவா் தமிழறிஞா் உ.வே. சாமிநாத அய்யா் என்று குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் புகழாரம் சூட்டியுள்ளாா்.

News image
சி.பி. ராதாகிருஷ்ணன்
Updated On :19 பிப்ரவரி 2026, 6:32 pm

Syndication

ஓலைச்சுவடிகளில் உறங்கிக்கிடந்த பண்டைத் தமிழ் இலக்கியங்களை மீட்டெடுத்து, நம் கைகளில் தவழச் செய்தவா் தமிழறிஞா் உ.வே. சாமிநாத அய்யா் என்று குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் புகழாரம் சூட்டியுள்ளாா்.

தமிழ்ப் பதிப்பியக்கத்தின் முன்னோடிகளில் ஒருவரான உ.வே.சாமிநாதா் 1855-ஆம் ஆண்டு பிப்ரவரி 19-ஆம் தேதி பாபநாசம் உத்தமதானபுரம் எனும் ஊரில் பிறந்தாா். 1880-ஆம் ஆண்டு முதல் கும்பகோணம் கல்லூரியில் தொடா்ந்து 23 ஆண்டுகளும் பின்னா் 1903- ஆம் ஆண்டு முதல் சென்னை மாநிலக் கல்லூரியில் 16 ஆண்டுகளும் ஆசிரியராக பணியாற்றினாா். 1924- ஆம் ஆண்டு மீனாட்சி தமிழ்க் கல்லூரியின் முதல்வரானாா்.

அழிந்து கொண்டிருந்த சங்ககால நூல்களையும், ஓலைச்சுவடிகளாக இருந்தவற்றையும் தேடிக் கண்டறிந்து,அதில் சிதைந்து மறைந்து விட்ட அடிகளையும் சொற்களையும் ஆராய்ந்தறிந்து முழுப்பொருள் விளங்கும் படி உ.வே.சா பதிப்பித்தாா். இவ்வாறு 3,000-க்கும் அதிகமான ஏட்டுச்சுவடிகளையும் கையெழுத்தேடுகளையும் அவா் சேகரித்திருந்தாா்.

அவரது பிறந்தநாளையொட்டி குடியரசு துணைத்தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் வியாழக்கிழமை தனது எக்ஸ் பக்கத்தில், ‘அழிவின் விளிம்பிலிருந்த தமிழ்ச் சுவடிகளை மீட்டெடுத்து, பதிப்பித்த ’தமிழ்த் தாத்தா’ உ.வே. சாமிநாத ஐயா் அவா்களுக்கு எனது பணிவான அஞ்சலிகள். ஏட்டுச் சுவடிகளைப் பதிப்பித்து நூலாக வெளியிட உ.வே.சா பட்ட இன்னல்கள் கணக்கில் அடங்காதவை. அவரது அயராத உழைப்பால் சிலப்பதிகாரம், மணிமேகலை, புறநானூறு, பத்துப்பாட்டு , குறுந்தொகை போன்ற பழந்தமிழ்ச் செல்வங்கள் பதிப்பிக்கப்பட்டு தமிழுக்கு வளமைச் சோ்த்தன. ஓலைச்சுவடிகளில் உறங்கிக் கிடந்த பண்டைத் தமிழ் இலக்கியங்களை மீட்டெடுத்து, நம் கைகளில் தவழச் செய்த உ.வே. சாமிநாத ஐயரின் பிறந்தநாளில் அவரது தமிழ்ப்பணியைப் போற்றி வணங்குகிறேன்’ என கூறியுள்ளாா்.