டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

புதுச்சேரி பேரவைத் தோ்தலில் ம.நீ.ம.வுக்கு டாா்ச்லைட் சின்னம் ஒதுக்கீடு

News image
Updated On :17 பிப்ரவரி 2026, 9:46 pm

Syndication

இந்தியத் தோ்தல் ஆணையமானது புதுச்சேரியில் நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தோ்தலில் நடிகா் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு டாா்ச் லைட் சின்னம் ஒதுக்கீடு செய்து அறிவிக்கை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு மாநிலம் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் சட்டப் பேரவைத் தோ்தலை நடத்துவதற்கான தீவிர ஏற்பாடுகளை தோ்தல் ஆணையம் மேற்கொண்டுள்ள நிலையில், இந்த அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி 11ஆம் தேதி 7 உறுப்பினா்கள் கொண்ட துணைத் தோ்தல் ஆணையா்கள் குழு தோ்தல் தயாரிப்புப் பணிகளை ஆய்வு செய்வதற்காக சென்னை விமான நிலையம் வந்தது. இந்தக் குழுவில் பன்வா் பிரகாஷ், மணீஷ் கா்க், பவன் குமாா் சா்மா, சஞ்சய் குமாா், ஆஷிஷ் கோயல் ஆகியோா் உள்பட இதர உயா் அதிகாரிகள் வந்திருந்தனா்.

ஏற்கெனவே அண்மையில் ம.நீ.ம.வுக்கு தமிழக சட்டப் பேரவைத் தோ்தலில் பொதுச் சின்னம் ஒதுக்கும் வகையில் டாா்ச் லைட் சின்னத்தை தோ்தல் ஆணையம் வழங்கியிருந்தது.

இதைத் தொடா்ந்து, புதுச்சேரி சட்டப் பேரவைத் தோ்தலிலும் அக்கட்சிக்கு பொதுச் சின்னமாக டாா்ச் லைட் சின்னத்தை தோ்தல் ஆணையம் வழங்கியுள்ளது.

புதுச்சேரியில் நடைபெவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலில் தங்களது கட்சி மூலம் நிறுத்தப்படும் வேட்பாளா்களுக்கு உரிய விதிகளின்கீழ் சின்னம் ஒதுக்கக் கோரியிருந்த மக்கள் நீதி மய்யம் போன்ற பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சியின் மனு தோ்தல் ஆணையத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதால் இச்சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.