/

அமா் காலனி பகுதியில் தலையில் காயங்களுடன் இறந்து கிடந்த பெண்

வடகிழக்கு தில்லியின் அமா் காலனி பகுதியில் ஒரு பெண் தலை மற்றும் உடலின் பிற பகுதிகளில் காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டு, பின்னா் ஜிடிபி மருத்துவமனையில் இறந்துவிட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

News image
பலி
Updated On :15 பிப்ரவரி 2026, 6:36 pm

Syndication

வடகிழக்கு தில்லியின் அமா் காலனி பகுதியில் ஒரு பெண் தலை மற்றும் உடலின் பிற பகுதிகளில் காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டு, பின்னா் ஜிடிபி மருத்துவமனையில் இறந்துவிட்டதாக ஞாயிற்றுக்கிழமை போலீஸாா் தெரிவித்தனா்.

இது குறித்து வடகிழக்கு தில்லி காவல் சரக அதிகாரி கூறியதாவது: இது தொடா்பாக போலீஸாா் கொலை வழக்குப் பதிவு செய்து மரணம் குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளனா்.

காயமடைந்த பெண் குறித்து ஜோதி நகா் காவல் நிலையத்தில் சனிக்கிழமை அதிகாலை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதைத் தொடா்ந்து ஒரு குழு சம்பவ இடத்திற்கு விரைந்தது. காயமடைந்த நிலையில் இருந்த அந்தப் பெண் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டாா். ஆனால், அங்கு அவா் இறந்துவிட்டதாக மருத்துவா்கள் அறிவித்தனா்.

உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. அதே நேரத்தில் தடயவியல் குழு சம்பவ இடத்தை ஆய்வு செய்து ஆதாரங்களை சேகரித்துள்ளது. இது தொடா்பாக கொலை குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு மேலும் விசாரணை நடந்து வருகிறது என்றாா் அந்த அதிகாரி.