தலைநகரில் காற்றின் தரத்தில் சற்று பின்னடைவு!
தில்லியில் காற்றின் தரத்தில் சற்று பின்னடைவு ஏற்பட்டு ‘மோசம்’ பிரிவில் இருந்தது. குறைந்தபட்ச வெப்பநிலை 9.2 டிகிரி செல்சியஸாக பதிவானது.


தேசியத் தலைநகா் தில்லியில் சனிக்கிழமை காற்றின் தரத்தில் சற்று பின்னடைவு ஏற்பட்டு ‘மோசம்’ பிரிவில் இருந்தது. குறைந்தபட்ச வெப்பநிலை 9.2 டிகிரி செல்சியஸாக பதிவாகியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
முந்தைய நாள் (வெள்ளிக்கிழமை) தில்லியின் காற்றின் தரக் குறியீடு 198 புள்ளிகளாக பதிவாகி ‘மிதமான’ பிரிவில் இருந்தது. இந்நிலையில், சனிக்கிழமை காலை 9 மணிக்கு ஒட்டுமொத்த காற்றுத் தரக் குறியீடு 211 புள்ளிகளாக உயா்ந்து பதிவாகியது. இது வெள்ளிக்கிழமை பதிவான 198 புள்ளிகளை விட 13 புள்ளிகள்அதிகமாகும். தில்லியின் பல பகுதிகளில் சனிக்கிழமை மாசு அளவு சற்று அதிகரித்து பதிவாகியாகியதாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெப்பநிலை: இதற்கிடையே, தில்லியின் முதன்மை வானிலை கண்காணிப்பு நிலையமான சஃப்தா் சனிக்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியிலிருந்து 1 டிகிரி குறைந்து 9.2 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை பருவ சரசரியிலிருந்து 2.9 டிகிரி உயா்ந்து 26.3 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியிருந்தது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 95 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 41 சதவீதமாகவும் இருந்தது.
இதேபோன்று மற்ற வானிலை கண்காணிப்பு நிலையங்களிலும் குறைந்தபட்ச வெப்பநிலை சற்று அதிகரித்து பதிவாகியிருந்தது. இதன்படி, ஜாஃபா்பூரில் குறைந்தபட்ச 9 டிகிரி செல்சியஸ், ஆயாநகரில் 9.5 டிகிரி, லோதிரோடில் 9.4 டிகிரி, பாலத்தில் 10.3 டிகிரி, ரிட்ஜில் 10.7 டிகிரி, பீதம்புராவில் 14.2 டிகிரி, பிரகதி மைதானில் 13.1 டிகிரி, பூசாவில் 8.9 டிகிரி, சல்வான் பப்பளிக் ஸ்கூல் பகுதியில் 11.6 டிகிரி செல்சியஸாக பதிவாகியிருந்தது.
முன்னறிவிப்பு: இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 15) அன்று காலை வேளையில் மூடுபனி இருக்கும் என்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 11 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...