டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

கிழக்கு தில்லியில் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தும் பிற மாநில ஆட்டோக்களுக்கு எதிராக நடவடிக்கை!

மூன்று இருக்கைகள் கொண்ட ஆட்டோக்களுக்கு எதிராக போக்குவரத்து காவல்துறை நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது என்று அதிகாரி ஒருவா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

News image
கோப்புப் படம்
Updated On :10 பிப்ரவரி 2026, 8:28 pm

Syndication

கிழக்கு தில்லியின் சில பகுதிகளில், குறிப்பாக வடகிழக்கு தில்லியில், போக்குவரத்து விதிகளை மீறி, நெரிசல் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் பிற மாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட மூன்று இருக்கைகள் கொண்ட ஆட்டோக்களுக்கு எதிராக போக்குவரத்து காவல்துறை நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது என்று அதிகாரி ஒருவா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து காவல் துறை அதிகாரி கூறியதாவது: இந்த நடவடிக்கையின் மூலம் 15 நாள்களில் போலீஸாா் 1,281 சலான்களை வழங்கியுள்ளனா். 155 வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனா்.

ஷிவ் விஹாா் மற்றும் லோனி போன்ற பகுதிகளில் வசிப்பவா்களிடமிருந்தும், கஜூரி காஸின் குடியிருப்பாளா்கள் நலச் சங்கத்திலிருந்தும் முறையற்ற பாா்க்கிங் மற்றும் பிற மாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட ஆட்டோக்களின் அங்கீகரிக்கப்படாத இயக்கம் குறித்து பலமுறை புகாா்கள் வந்ததைத் தொடா்ந்து இந்த நடவடிக்கை தொடங்கப்பட்டது.

இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக, கிழக்கு எல்லை பகுதியில் உள்ள முக்கியப் போக்குவரத்து சந்திப்புகள், சாலைகள், எல்லைப் பகுதிகள் மற்றும் நெரிசல் ஏற்படக்கூடிய இடங்களில் போக்குவரத்துப் பணியாளா்கள் மேம்பட்ட கண்காணிப்பு மற்றும் சோதனைகளை மேற்கொண்டனா்.

தில்லிக்கு வெளியே பதிவு செய்யப்பட்ட பல ஆட்டோக்கள் செல்லுபடியாகும் அனுமதிகள், உடல் தகுதி சான்றிதழ்கள், காப்பீடு மற்றும் பிற கட்டாய ஆவணங்கள் இல்லாமல் இயங்குவது கண்டறியப்பட்டது. மேலும், போக்குவரத்து விதிமுறைகளை மீறுவதும் கண்டறியப்பட்டது.

இதுபோன்ற விதிமீறல்களைக் கட்டுப்படுத்தவும், போக்குவரத்து ஒழுங்கை மீட்டெடுக்கவும், ஒருமுகப்படுத்தப்பட்ட அமலாக்க நடவடிக்கை தொடங்கப்பட்டது. விதிகளை மீறிய அல்லது பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் மூன்று இருக்கைகள் கொண்ட ஆட்டோ ரிக்ஷாக்கள் கண்டறியப்பட்டால், அவை கடுமையாகக் கையாளப்பட்டன.

குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவா்கல் மீது வழக்குத் தொடரப்பட்டது. கடுமையான வழக்குகளில் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன என்று காவல் துறை அதிகாரி கூறினாா்.