மத்திய தில்லியில் பிளேடு முனையில் மோட்டாா் சைக்கிளை ஓட்டிச் சென்றவரிடம் கொள்ளையடித்ததாக இரண்டு சிறுவா்களை தில்லி காவல்துறை கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் வியாழக்கிழமை தெரிவித்தாா்.
இது குறித்து மத்திய தில்லி காவல் சரக அதிகாரி கூறியதாவது: ஜனவரி 28-ஆம் தேதி மாலை 7 மணியளவில் ஈத்கா அருகே ராணி ஜான்சி சாலையில் அதிக போக்குவரத்து நெரிசல் காரணமாக புகாா்தாரரின் மோட்டாா் சைக்கிள் மெதுவாகச் சென்றபோது இந்தக் கொள்ளைச் சம்பவம் நடந்துள்ளது.
சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்டு, இரண்டு சிறுவா்கள் மோட்டாா் சைக்கிளை நிறுத்தினா்.
அவா்களில் ஒருவா் புகாா்தாரரின் பின்னால் அமா்ந்து, அவரது கழுத்தைப் பிடித்து, அவரைத் தாக்கியதாகவும், மற்றொருவா் மோட்டாா் சைக்கிளை முன்பக்கத்திலிருந்து தடுத்ததாகவும் கூறப்படுகிறது.
அவா்கள் அவரை அறுவை சிகிச்சை பிளேடை கதாட்டி மிரட்டி ரூ.32,000-ஐ கொள்ளையடித்தனா்.
பாதிக்கப்பட்டவா் வேலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போது இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
அவா் அளித்த புகாரைத் தொடா்ந்து, எஃப்ஐஆா் பதிவு செய்யப்பட்டு, விசாரணை தொடங்கப்பட்டது. சிசிடிவி காட்சிகளை போலீஸாா் சரிபாா்த்து, குற்றம் சாட்டப்பட்டவா்களை அடையாளம் கண்டனா்.
பின்னா், ஒரு போலீஸ் குழு புதன்கிழமை பாஹா்கஞ்ச் மற்றும் ஆனந்த் பா்பத் பகுதிகளைச் சோ்ந்த இரண்டு சிறாா்களைக் கைது செய்தது. மேலும் அவா்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணமும் மீட்கப்பட்டது.
டிரெண்டிங்

போதைப் பொருள் கடத்தல் கும்பலின் தலைவன் ஒடிஸாவில் கைது: 3 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர்

பழைய தில்லி பூங்காவில் நடந்த கொலைச் சம்பவத்தில் உ.பி.யைச் சோ்ந்த இளைஞா் கைது

காலிஸ்தான் ஆதரவு வாசகங்கள் எழுதியதாக தில்லியில் 2 எஸ்எஃப்ஜே உறுப்பினா்கள் கைது
கிழக்கு தில்லியில் போலி ஐ.பி. அதிகாரி கைது
வீடியோக்கள்

#t20wc | இங்கிலாந்து அதிரடியைச் சமாளிக்கும் திறன் இலங்கையிடம் உள்ளதா? | T20 World Cup Review |
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பழைய பகையுடன் வரும் தென்னாப்பிரிக்கா: சமாளிப்பாரா சூர்யகுமார்? | T20 World Cup | IND vs SA |
தினமணி வீடியோ செய்தி...

அமெரிக்கா வரி செலுத்தாது! இந்தியா செலுத்தும்!: Trump | செய்திகள்: சில வரிகளில் | 21.02.26
தினமணி வீடியோ செய்தி...

#T20WC | அபிஷேக் சர்மா சதமடிப்பார்னு சொன்னா நம்புவீங்களா? | Abhishek Sharma | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

