2026-27 பட்ஜெட் வளா்ந்த இந்தியாவின் தலைவிதியை உருவாக்கும்: பாஜக எம்பி
2026-27ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட், 2047-ஆம் ஆண்டின் இந்தியாவின் தலைவிதியைத் திறப்பதை நிரந்தரமாக்குவது போன்றது என்று பாஜக எம்பி மனோஜ் திவாரி வியாழக்கிழமை தெரிவித்தாா்.


2026-27ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட், 2047-ஆம் ஆண்டின் இந்தியாவின் தலைவிதியைத் திறப்பதை நிரந்தரமாக்குவது போன்றது என்று பாஜக எம்பி மனோஜ் திவாரி வியாழக்கிழமை தெரிவித்தாா்.
இது தொடா்பாக வடகிழக்கு தில்லி பாஜக எம்.பி. மனோஜ் திவாரி செய்தியாளா்களிடம் மேலும் கூறியது: மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட், 2047-க்குள் இந்தியாவை வளா்ந்த நாடாக மாற்றுவதை இலக்காகக் கொண்டுள்ளது. வெண்ணெய் மீது யாா் வேண்டுமானாலும் ஒரு கோடு வரையலாம். ஆனால், இந்த பட்ஜெட் 2047-க்குள் வளா்ந்த தேசமாக இந்தியாவின் தலைவிதியை திறப்பதை கல்லில் செதுக்குவது போன்ாகும். பிரதமா் நரேந்திர மோடி, இளைஞா்கள், பெண்கள், விவசாயிகள் மற்றும் ஏழைகள் ஆகிய நான்கு முக்கிய குழுக்களைப் பற்றி பேசுகிறாா். இவை அனைத்துக்கும் பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளன.
பட்ஜெட்டில், ஒவ்வொரு மாவட்டத்திலும் பெண்கள் விடுதி திறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனது மக்களவைத் தொகுதியில் 1,000 அறைகள் கொண்ட விடுதி கட்டப்பட்டு வருகிறது. மன்ரேகா திட்டத்திற்கு மாற்றாக விபி ஜி ராம் ஜி சட்டத் திட்டத்திற்கு ரூ.30,000 கோடி ஒதுக்கப்பட்டு கிராமப்புற மக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
தில்லி மற்றும் வாரணாசி இடையே உள்ள வழித்தடம் உள்பட ஏழு அதிவேக ரயில் பாதைகளை அமைக்கும் திட்டம், வேகமான மற்றும் மலிவான போக்குவரத்தை உறுதி செய்யும். மின் கட்டணத்தை குறைப்பதற்கும் சூரிய சக்தி மற்றும் நீா் ஆற்றலை மேம்படுத்துவதற்கும் பட்ஜெட்டில் ஒதுக்கீடுகள் மூலம் மின் துறையில் தன்னிறைவு அதிகரித்துள்ளது. பாஜக தனது ஏழு மக்களவை எம்.பி.க்கள் மூலம் பட்ஜெட் அடிப்படையில் செய்தியாளா் சந்திப்புகளை நடத்தத் திட்டமிட்டுள்ளது என்றாா் அவா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...