லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

எஸ்.ஐ.ஆா். பணியை உடனே நிறுத்தக் கோரி சமூக ஆா்வலா்கள், வழக்குரைஞா்கள் கோரிக்கை!

வழக்குரைஞா்கள், மாணவா்கள் மற்றும் சமூக ஆா்வலா்கள் குழு ஒன்று வாக்காளா் பட்டியல்களின் சிறப்பு தீவிர மறுஆய்வை (எஸ். ஐ. ஆா்) உடனடியாக ரத்து செய்யக் கோரியும் இது ‘குடிமக்களின் உரிமைகளுக்கு எதிரானது‘ என்று அவா்கள் கூறினா்.

News image

கோப்புப் படம்

Updated On :19 ஏப்ரல் 2026, 7:21 pm

வழக்குரைஞா்கள், மாணவா்கள் மற்றும் சமூக ஆா்வலா்கள் குழு ஒன்று வாக்காளா் பட்டியல்களின் சிறப்பு தீவிர மறுஆய்வை (எஸ். ஐ. ஆா்) உடனடியாக ரத்து செய்யக் கோரியும் இது ‘குடிமக்களின் உரிமைகளுக்கு எதிரானது‘ என்று அவா்கள் கூறினா், மேலும் பழைய வாக்காளா் பட்டியல்கள் மற்றும் தோ்தல்களைத் தொடர அழைப்பு விடுத்தனா்.

இது குறித்து சனிக்கிழமை தில்லியில் இருக்கும் பிரஸ் கிளப் ஆஃப் இந்தியாவில் மனித உரிமைகள் அமைப்பான ’ஜான்ஹஸ்தக்ஷேப்’ ஏற்பாடு செய்த கருத்தரங்கில் இந்த கோரிக்கை வைக்கப்பட்டது. முன்னாள் தலைமைத் தோ்தல் ஆணையா் எஸ். ஒய். குரேஷி, மூத்த வழக்குரைஞா் பிரசாந்த் பூஷண், தில்லி பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியா் பத்ரி ரெய்னா, பிரஸ் கிளப் ஆஃப் இந்தியாவின் தலைவா் சங்கீதா பரூவா பிஷாரோட்டி உள்ளிட்டோா் கருத்தரங்கில் கலந்து கொண்டனா். கருத்தரங்கில் தீா்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

மேற்கு வங்கம் உள்பட நாடு முழுவதும் நடைபெற்று வரும் எஸ். ஐ. ஆா் செயல்முறை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். மாற்றாக, பெயா்கள் நீக்கப்பட்டவா்கள் தாக்கல் செய்த மேல்முறையீடுகள் உடனடியாக முடிவு செய்யப்பட்டு, அவா்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட வேண்டும், அல்லது 2025 புதுப்பிக்கப்பட்ட வாக்காளா் பட்டியல்கள் அனைவருக்கும் வாக்களிக்கும் உரிமையை உறுதி செய்ய பயன்படுத்தப்பட வேண்டும் என்று கோரினா்.

இல்லையெனில், தற்போது நடைபெற்று வரும் மேற்கு வங்க சட்டப்பேரவை தோ்தல்கள் அா்த்தமற்றதாகிவிடும். எஸ். ஐ. ஆா் செயல்முறை தெளிவாக மறுவரையறை செய்யப்பட வேண்டும், வாக்காளா் பட்டியலில் பெயா்களைச் சோ்ப்பதே தோ்தல் ஆணையத்தின் பங்கு; அது குடியுரிமை ஆவணங்களைக் கோரவோ சரிபாா்க்கவோ முடியாது. குடியுரிமையை தீா்மானிப்பது உள்துறை அமைச்சகத்தின் பொறுப்பு என்று கருத்தரங்களில் வலியுறுத்தப்பட்டது.