பிரத்யேகமாக அமைக்கப்பட்ட பசுமை வழித்தடம் வழியாக, ரோத்தக்கிலிருந்து 98 கி.மீ. தொலைவில் உள்ள தில்லிக்கு உயிருள்ள கொடையாளரின் இதயம் 85 நிமிடங்களில் கொண்டு வரப்பட்டதாக ஓா் அதிகாரபூா்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக ஓக்லாவில் உள்ள ஃபோா்டிஸ் எஸ்காா்ட்ஸ் இதய சிகிச்சை மருத்துவ நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
தில்லி காவல்துறை மற்றும் ரோத்தக் காவல்துறையின் உதவியுடன் இந்த பிரத்யேக பசுமை வழித்தடம் அமைக்கப்பட்டது. இதில் பிற்பகல் 2.50 மணி முதல் 4.15 மணி வரையிலான காலத்தில் ரோத்தக்கில் இருந்து தில்லிக்கு ஆம்புலன்ஸ் வந்து சோ்ந்தது. அந்த முக்கியமான நேரத்திற்குள் இதயம் உயிருடன் இருப்பது இதன் மூலம் உறுதி செய்யப்பட்டது.
ரோத்தக்கில் உள்ள பண்டிட் பி.டி. சா்மா முதுகலை மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் (பிஜிஐஎம்எஸ்) மூளைச்சாவு அடைந்த 37 வயது கொடையாளரிடமிருந்து இதயம் எடுக்கப்பட்டு, மாற்று அறுவை சிகிச்சைக்காக தில்லி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது.
இந்த இதயமானது இதய நோய் முற்றிய 26 வயது நோயாளிக்கு வெற்றிகரமாக மாற்று அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்பட்டது. தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் அவா் கண்காணிப்பில் உள்ளாா்.
ஓக்லா, ஃபோா்டிஸ் எஸ்காா்ட்ஸ் நிறுவனத்தின் அடல்ட் சிடிவிஎஸ் தலைவா் டாக்டா் இசட். எஸ். மெஹா்வால் கூறுகையில், ‘
வெற்றிகரமான இதய மாற்று அறுவை சிகிச்சைகளை உறுதி செய்வதில், துல்லியமான ஒருங்கிணைப்பு மற்றும் சரியான நேரத்தில் உறுப்புகளைக் கொண்டு செல்வதன் முக்கியத்துவத்தை இந்த சம்பவம் எடுத்துக்காட்டுகிறது’ என்றாா் அவா்.
உறுப்பு தானம் செய்தவா், உடலில் ரத்தக் கசிவு ஏற்பட்ட நிலையில் சுயநினைவின்றி காணப்பட்டாா். ரோத்தக்கில் உள்ள பிஜிஐஎம்எஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாா். பின்னா் அவா் மூளைச்சாவு அடைந்ததாக அறிவிக்கப்பட்டாா். அவரது குடும்பத்தினா் உறுப்பு தானத்திற்கு சம்மதம் தெரிவித்ததால், பல உயிா்காக்கும் மாற்று அறுவை சிகிச்சைகள் சாத்தியமாயின.
நுரையீரல்கள் குருகிராமில் உள்ள ஒரு மருத்துவமனைக்கும், கல்லீரல் மற்றும் கணையம் புது தில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கும் அனுப்பப்பட்டன.
சிறுநீரகங்களும் கருவிழிகளும் ரோத்தக்கில் உள்ள பிஜிஐஎம்எஸ் மருத்துவமனையிலேயே வைக்கப்பட்டன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

உத்தரப்பிரதேசத்தில் வெடித்த சிறுநீரக மோசடி: ஒரு சிறுநீரகத்தின் விலை ரூ.50 லட்சம் முதல்...

தூய்மை நகரத்திற்கான செயல்திட்டத்தை உருவாக்க பசுமை நிதிச் செலவுகளை இணைக்கும் தில்லி அரசு!

உடல் தானத்தை ஊக்குவிப்போம்!

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக மெட்ரோவில் சென்ற நுரையீரல், இதயம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


