உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் இருந்து உருவான ஒரு பெரிய அளவிலான சட்டவிரோத சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மோசடி, உத்தரப் பிரதேசத்தின் நான்கு நகரங்களில் உள்ள ஒன்பது மருத்துவமனைகளின் கூட்டுச் சதியுடன் நடந்திருப்பது தெரிய வந்துள்ளது.
இந்த மோசடியில் ஈடுபட்ட மருத்துவர்களால் 50-க்கும் மேற்பட்ட சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், சிறுநீரகத்தைப் பெற்ற நோயாளிகளிடம் ரூ.50 லட்சம் முதல் ரூ.2.5 கோடி வரை கட்டணம் வசூலிக்கப்பட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
பீகாரைச் சேர்ந்த ஆயுஷ் என்ற நபர்,, தனது சிறுநீரகத்தை தானம் செய்தால் பெரிய தொகை கொடுப்பதாகக் கூறி மருத்துவமனை, வாக்குறுதி அளித்ததாகவும், ஆனால் சொன்னதை விட மிகக் குறைவான தொகையே தனக்கு வழங்கப்பட்டதாகக் குற்றம் சாட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்தபோது இந்த மோசடி வெளிச்சத்திற்கு வந்தது.
இந்த புகாரைத் தொடர்ந்து, காவல்துறை விசாரணையைத் தொடங்கி, பல மருத்துவர்கள், ஆய்வக உதவியாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், ஓட்டுநர்கள் உள்ளிட்ட பலரைக் கைது செய்து மிகப்பெரிய மோசடி கும்பலை கண்டுபிடித்தது. இதில் பலர் இன்னும் தலைமறைவாக உள்ளனர்.
குற்றஞ்சாட்டப்பட்ட 15 குற்றவாளிகளில், இதுவரை ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் மருத்துவர்கள், மருத்துவமனை உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகப் பணியாளர்களும் அடங்குவர் என்று காவல்துறை அதிகாரி கூறினார்.
மருத்துவர்களாகப் பயிற்சி பெற்ற மோசடியாளர்கள், நள்ளிரவில் மட்டுமே தங்கள் நடமாட்டத்தை மேற்கொண்டு சிறுநீரகத்தைப் பெறுவது, மாற்று அறுவை சிகிச்சை செய்வது, பிறகு விடியலுக்குள் தங்கள் இடங்களுக்குச் சென்று விடுவது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாகவும் காவல்துறை கூறுகிறது.
Summary
A kidney scam incident has come to light in Uttar Pradesh.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பசுமை வழித்தடம் மூலம் ரோத்தக்கிலிருந்து தில்லிக்கு 85 நிமிஷங்களில் எடுத்துவரப்பட்ட இதயம்!

உடல் தானத்தை ஊக்குவிப்போம்!

நுரையீரல் குறைபாடு: ஒரு வயது குழந்தைக்கு நுண்துளை சிகிச்சை

உடல் உறுப்பு தானம் செய்தவா்கள் கௌரவிப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



