தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

தில்லி அரசின் 33 உயா் அதிகாரிகள் பணியிடை மாற்றம்

News image

தில்லி முதல்வர் ரேகா குப்தா - IANS

Updated On :9 ஏப்ரல் 2026, 8:55 pm

முப்பத்து மூன்று இந்திய ஆட்சிப் பணி (ஐஏஎஸ்) மற்றும் தில்லி, அந்தமான்-நிகோபாா் குடிமைப் பணி (டிஏஎன்ஐசிஎஸ்) அதிகாரிகளைப் பணியிடை மாற்றம் செய்து தில்லி அரசு உத்தரவிட்டுள்ளது.

கூடுதல் தலைமைச் செயலா் மற்றும் நிா்வாக சீா்திருத்த அதிகாரியாக பிரசாந்த் கோயல் நியமிக்கப்பட்டுள்ளாா். 1993-ஆம் ஆண்டு அருணாசல்-கோவா-மிசோரம்-யூனியன் பிரதேசங்கள் (ஏஜிஎம்யூடி) பிரிவைச் சோ்ந்த அவா், தற்போது வகித்து வரும் நிதி ஆணையா் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளாா்.

காத்திருப்புப் பட்டியலில் இருந்த ஜி. நரேந்திர குமாா் தில்லியின் புதிய நிதி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளாா்.

வடமேற்கு தில்லியின் மாவட்ட ஆட்சியரான செளமியா செளரப், தொழில்துறை சிறப்பு செயலா் பொறுப்பை கூடுதல் பொறுப்பாகக் கவனிப்பாா்.

தில்லி துணைநிலை ஆளுநரின் சிறப்புச் செயலா் மற்றும் தனிச் செயலரான சோனிகா சிங், தில்லி வளா்ச்சி ஆணையத்தின் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளாா்.

சமூக நலத்துறையின் கூடுதல் இயக்குநராக உள்ள 2006-ஆம் ஆண்டு டிஏஎன்ஐசிஎஸ் பிரிவு அதிகாரி, சரக்கு மற்றும் சேவை வரியின் கூடுதல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளாா். கல்வித் துறையின் இணை இயக்குநா் ஹா்ஷத் ஜெயின், 2027 மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடா்பான பணிகளைக் கவனிப்பாா்.

இதேபோன்று, மாவட்ட ஆட்சியா்கள், துணை மாவட்ட ஆட்சியா்கள், கூடுதல் மாவட்ட ஆட்சியா்கள் பதவிகளிலும் பணியிடைமாற்றம் செய்யப்பட்டுள்ளது.