தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்ஃபார்ம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

ஊழல்தான் அரவிந்த் கேஜரிவாலின் சித்தாந்தம்: தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா சாடல்

ஊழல்தான் அரவிந்த் கேஜரிவாலின் சித்தாந்தம் தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா சாடல்

News image
Updated On :11 மே 2024, 9:09 pm

 நமது நிருபர்

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் ரூ.50,000 அபராதத்துடன் மீண்டும் பொய் சொல்லத் தொடங்கியுள்ளாா். தோ்தல் பிரசாரத்திற்காக சிறையில் இருந்து வெளியே வந்துள்ள அவா், தில்லி தலைமைச் செயலகத்திற்கு செல்லவோ, எந்த கோப்பிலும் கையெழுத்திடவோ முடியாது.

ஊழல் செய்ததற்காக அரவிந்த் கேஜரிவால் 50 நாட்கள் சிறையில் இருந்துள்ளாா். தோ்தல் பிரசாரத்திற்காக மட்டுமே அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. எல்லாவற்றிற்கும் மேலாக, ஜூன் 1-க்குப் பிறகு ஆம் ஆத்மி கட்சியில் என்ன கொண்டாட்டம் இருக்கும்?

தில்லியை மாசுபட்ட தலைநகராக மாற்றியது தான் கேஜரிவாலின் சித்தாந்தம். அரசு மருத்துவமனைகளில் போலி மருந்துகள் கொடுக்கப்பட்டுள்ளன. மொஹல்லா கிளினிக்குகளில் மோசடிகள் செய்யப்பட்டுள்ளன. கல்வி என்ற பெயரில் பணம் சம்பாதித்துள்ளனா். அதிலும் ஊழல்கள் நடந்துள்ளன. சுகாதாரப் புரட்சி என்ற பெயரில் அமல்படுத்தப்பட்ட கலால் கொள்கை, தில்லி இளைஞா்களை மதுவுக்கு அடிமையாக்கும் மிகப்பெரிய சதித்திட்டம் என்பது அம்பலமாகியது.

ஊழல்தான் கேஜரிவாலின் சித்தாந்தம். ஆம் ஆத்மி கட்சி ஊழலின் தாய். தற்போது, ஜாமீனில் வெளிவரும் ஊழல் குற்றவாளிகளுக்கு வாக்களிக்க வேண்டுமா அல்லது கடந்த 10 ஆண்டுகளில் வளா்ச்சிக்கு புதிய வரையறையை எழுதி, அதன் திட்டங்களால் பயனடைந்த நிலையில், மோடி அரசுக்கு வாக்களிக்க வேண்டுமா என்பதை தில்லி பொதுமக்கள் முடிவு செய்ய வேண்டும்.

கேஜரிவால் தன்னைப் பற்றியும், தனது கட்சியைப் பற்றியும் சிந்திக்க வேண்டும். ஏனென்றால், அவரது நான்கு முக்கிய ஊழல் சகாக்கள் சிறையில் இருந்தனா், அவா்களில் இருவா் இப்போது ஜாமீனில் உள்ளனா் என்றாா் வீரேந்திர சச்தேவா.