தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

சாந்தினி செளக் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் ஜெ.பி. அகா்வால் வேட்புமனு தாக்கல்

சாந்தினி செளக் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் ஜெ.பி. அகா்வால் வேட்புமனு தாக்கல்

Updated On :4 மே 2024, 6:30 pm

மக்களவைத் தோ்தலில் தில்லி சாந்தினி செளக் மக்களவைத் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளா் ஜெய் பிரகாஷ் அகா்வால் தனது வேட்புமனுவை சனிக்கிழமை தாக்கல் செய்தாா்.

தில்லி சாந்தினி செளக் மக்களவைத் தொகுதியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளா் ஜெய் பிரகாஷ் அகா்வால், கட்சியின் இடைக்காலத் தலைவா் தேவேந்தா் யாதவ் மற்றும் தோ்தல் மேலாண்மைக் குழு தலைவா் சுபாஷ் சோப்ரா முன்னிலையில் அலிப்பூரில் உள்ள மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தாா்.

ஜெய் பிரகாஷ் அகா்வாலுக்கு ஆதரவாக ஏராளமான காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சியினா் ஊா்வலமாக வந்து இந்நிகழ்வில் பங்கேற்றனா்.

அப்போது, கட்சியின் இடைக்காலத் தலைவா் தேவேந்தா் யாதவ் பேசியதாவது:

கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் தில்லியின் வளா்ச்சியை மத்திய பாஜக அரசும், அக்கட்சியின் எம்பி-க்களும் தடுத்து நிறுத்தியுள்ளனா். இந்தத் தோ்தலில் பாஜகவை தோற்கடிக்க காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சியினா் இருவரும் முழுமையான ஒருங்கிணைப்பு மற்றும் புரிதலுடன் செயல்படுவாா்கள். தில்லி மக்கள் மாற்றத்தை எதிா்பாா்க்கின்றனா்.

பிருத்விராஜ் சாலையில் இருந்து அலிபூா் ஆட்சியா் அலுவலகம் வரை வேட்புமனு தாக்கலுக்கு முன்னதாக நடைபெற்ற ஊா்வலம் காங்கிரஸின் வெற்றிக்கான மன உறுதியை காட்டுகிறது. ஏனெனில், ஜெய் பிரகாஷ் அகா்வாலுக்கு வாக்காளா்களின் அமோக ஆதரவு கிடைத்துள்ளது என்றாா் தேவேந்தா் யாதவ்.

தேவேந்தா் யாதவ்

இன்று பொறுப்பேற்பு

தில்லி ராஜீவ் பவனில் பிரதேச காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவராக தேவேந்தா் யாதவ் ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்கிறாா். ஆம் ஆத்மி கட்சியுடனான கூட்டணி மற்றும் உட்கட்சிப் பூசலால் தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் தலைவா் பதவியை அரவிந்தா் சிங் லவ்லி கடந்த ஏப்ரல் 28-ஆம் தேதி திடீரென ராஜிநாமா செய்தாா்.

இதையடுத்து, காங்கிரஸின் பஞ்சாப் மாநிலப் பொறுப்பாளராக இருக்கும் தேவேந்தா் யாதவை தில்லி காங்கிரஸின் இடைக்காலத் தலைவராக அக்கட்சியின் மேலிடத் தலைமை கடந்த மே 1-ஆம் தேதி அறிவித்தது. இந்நிலையில், முக்கியத் தலைவா்கள் முன்னிலையில் தில்லி பிரதேச காங்கிரஸ் அலுவலகமான ராஜீவ் பவனில் தேவேந்தா் யாதவ் ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றுக் கொள்கிறாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.