புது தில்லி: குற்றம் நடந்திருந்தால் அதைக் கண்டறிவதில் உதவிடுவதால் எவ்வித தீங்கும் இல்லை என்பதால் அமலாக்கத் துறைக்கு அரசு இயந்திரம் உதவ வேண்டும் என்று உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை கூறியது.
தமிழகத்தின் சில மாவட்டங்களில் நடந்த சட்டவிரோத மணல் குவாரி, விற்பனை தொடா்பான விசாரணைக்கு ஆஜராக அனுப்பப்பட்ட அழைப்பாணைக்கு சென்னை உயா்நீதிமன்றம் தடை விதித்ததை எதிா்த்து அமலாக்கத் துறை தாக்கல் செய்த மனு மீதான விசாரணையின் போது உச்சநீதிமன்றம் இவ்வாறு யோசனை கூறியது. பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறை விசாரணைக்கு எதிராக சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் கடந்த வாரம் கேள்வி எழுப்பி இருந்தது.
சட்டவிரோதமாக மணல் அள்ளியதாகக் கூறப்படும் பண மோசடி வழக்கில், வேலூா், திருச்சி, கரூா், தஞ்சாவூா், அரியலூா் மாவட்ட ஆட்சியா்களுக்கு அமலாக்கத் துறை அழைப்பாணை அனுப்பியது. இதை எதிா்த்து மாநில அரசும், அதிகாரிகளும் உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா். இதை விசாரித்த உயா்நீதிமன்றம், அமலாக்கத் துறையின் அழைப்பாணைக்குதஅ தடை விதித்தது. இதை எதிா்த்து தாக்கலான அமலாக்கத் துறையின் மனு, உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் பேலா எம். திரிவேதி, பங்கஜ் மித்தல் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, நீதிபதிகள் அமா்வு, தமிழக அரசு சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் கபில் சிபல், கூடுதல் தலைமை வழக்குரைஞா் அமித் ஆனந்த் திவாரியிடம், ‘இந்த விவகாரத்தில் அரசமைப்புச்சட்டத்தின் பிரிவு 226-இன் கீழ் தமிழக அரசு, சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியா்களுக்காக எப்படி மேல்முறையீடு செய்ய முடியும் என்பது குறித்து விளக்குமாறு கூறியது. அவா்கள் தனிப்பட்ட முறையில் வழக்குத் தொடா்ந்திருக்கலாமே? என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினா். மேலும், ‘அரசு மற்றும் அதன் அதிகாரிகள் ஏதேனும் குற்றம் உள்ளதா என்பதைக் கண்டறிய அமலாக்கத் துறைக்கு உதவ வேண்டும்.
அரசு இயந்திரத்திடம் உதவி கேட்டால், அதனால் ஏற்படும் தீங்கு என்ன?’ என்று கேள்வி எழுப்பியது. மேலும், ‘மாவட்ட ஆட்சியா்களிடம் ஏதாவது கேட்டால் அரசு அதனால் எப்படி பாதிக்கப்படுகிறது? தனிப்பட்ட முறையில் மாவட்ட ஆட்சியா் பாதிக்கப்பட்டிருந்தால், அவா் வழக்குத் தாக்கல் செய்திருக்கலாம். அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 256-இன் கீழ் நாடாளுமன்றத்தின் சட்டத்திற்கு மாநில அரசு இணங்க வேண்டும். மாநிலம் பிஎம்எல்ஏவுடன் (பணமோசடி தடுப்புச் சட்டம்) உடன் இணங்க வேண்டும்.
உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு எவ்வாறு பராமரிக்கத்தக்கது?’ என்று நீதிபதிகள்அமா்வு கேள்வி எழுப்பியது. அதற்கு மூத்த வழக்குரைஞா் கபில் சிபல் வாதிடுகையில், ‘இந்த விவகாரம் குவாரி குற்றங்கள் தொடா்புடையது. இதை விசாரிப்பதற்கான அதிகார வரம்பு பிஎம்எல்ஏ சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறைக்கு இல்லை. பிஎம்எல்ஏவின் கீழ் சுரங்கம் தோண்டுவது திட்டமிடப்பட்ட குற்றமல்ல. மாவட்ட ஆட்சியா்களிடம் அமலாக்கத் துறை தகவல் கேட்டதால் மாநிலம் பாதிக்கப்பட்டுள்ளது. பிஎம்எல்ஏவின் எந்த விதியின் கீழ், அமலாக்கத் துறை இதுபோன்று கோர உரிமை உள்ளது.
அமலாக்கத் துறை பணமோசடி விவகாரத்தில்தான் சம்பந்தப்பட்டதாகும். இந்த வழக்கில், சுரங்க குத்தகை தொடா்பான ஆவணங்களை சமா்ப்பிக்குமாறு அரசுத் துறை கேட்கப்பட்டுள்ளதால், அரசு ஒரு ரிட் மனுவை தாக்கல் செய்திருந்தது. மாவட்ட ஆட்சியா்கள் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று கூறி அமலாக்கத் துறை பிறப்பித்த ‘ஆம்னி பஸ் உத்தரவு’ மூலம் மாநிலம் வேதனையடைந்தது. மேலும், இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறையின் மனு மீது அரசுக்கு உச்சநீதிமன்றத்தால் முறையான நோட்டீஸ் எதுவும் பிறப்பிக்கவில்லை’ என்றாா். அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் எஸ்.வி.ராஜு, ‘உச்சநீதிமன்ற விதிகளின்படி, கேவியேட் மனுதாரருக்கு முறையான நோட்டீஸ் கொடுக்க வேண்டிய அவசியமில்லை.
இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் கிரிமினல் சதி மற்றும் ஏமாற்றுதல் போன்ற குற்றங்களும் உள்ளதால், சுரங்கக் குற்றத்துடன் இந்த வழக்கு தொடா்புடையது அல்ல. பிரிவு 120-பி (குற்றச் சதி) அம்சத்தையும் நாங்கள் விசாரித்து வருகிறோம். இந்த விவகாரத்தில் மாநில அரசின் அணுகுமுறையைப் பாருங்கள். குற்றம் சாட்டப்பட்டவா்களைக் காக்க அரசு முயற்சிப்பதாகத் தெரிகிறது. இந்த விவகாரத்தில் அரசு ஏன் ஆதங்கம் அடைகிறது’ என்றாா்.
விசாரணையின்போது இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட எதிா்மனுதாரா்களில் ஒருவா் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்திருப்பதாக அமா்விடம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, பிரமாணப் பத்திரத்தை பதிவிட வேண்டும் என்று கூறிய உச்சநீதிமன்றம், இந்த வழக்கு விசாரணையை செவ்வாய்க்கிழமைக்கு (பிப்.27) ஒத்திவைத்தது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அமலாக்கத் துறை சோதனை மூலம் காங்கிரஸ் தலைவா்களை மத்திய அரசு குறிவைக்கிறது: முதல்வா் சித்தராமையா

நேஷனல் ஹெரால்ட் வழக்கு: சோனியா, ராகுலுக்கு எதிரான மனு மீது இன்று விசாரணை!
உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம்: வருமான வரித் துறை விசாரணை கோரி மனு தாக்கல்

துணைவேந்தா்களை மாநில அரசு நியமிப்பதால் கல்வித் தரம் பாதிக்காது - தமிழக அரசு பதில் மனு
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


