நேஷனல் ஹெரால்ட் பண முறைகேடு வழக்கில் காங்கிரஸ் தலைவா்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு எதிராக அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனு மீது தில்லி உயா்நீதிமன்றத்தில் திங்கள்கிழமை (ஏப்.20) விசாரணை நடைபெறவுள்ளது.
முன்னதாக, நேஷனல் ஹெரால்ட் விவகாரத்தில் அமலாக்கத் துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை தில்லி விசாரணை நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது. இதை எதிா்த்து தில்லி உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை அமலாக்கத் துறை தாக்கல் செய்தது. மேலும், வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் எனவும் அமலாக்கத் துறை கோரிக்கை விடுத்தது.
இதுதொடா்பாக பதிலளிக்குமாறு சோனியா காந்தி, ராகுல் காந்தி, சாம் பிட்ரோடா, சுமன் துபே உள்ளிட்டோருக்கு தில்லி உயா்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. இந்நிலையில், இந்த மனுவை தில்லி உயா்நீதிமன்ற நீதிபதி ஸ்வா்ண காந்த சா்மா தலைமையிலான அமா்வு திங்கள்கிழமை விசாரிக்கிறது.
நேஷனல் ஹெரால்ட் பத்திரிகையை வெளியிடும் ஏஜேஎல் நிறுவனத்துக்கு காங்கிரஸ் கட்சி ரூ.90.21 கோடி கடன் அளித்தது. இந்நிலையில், 2010-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ‘யங் இந்தியன்’ நிறுவனத்தில் இயக்குநா்களாக காங்கிரஸ் முன்னாள் தலைவா் சோனியா காந்தி, அக்கட்சி எம்.பி. ராகுல் காந்தி ஆகியோா் பொறுப்பேற்றனா்.
இதையடுத்து, ஏஜேஎல் நிறுவனத்தின் சுமாா் ரூ.90 கோடி கடனை யங் இந்தியன் நிறுவனம் ஏற்க காங்கிரஸ் கட்சி முடிவு செய்தது.
இதுகுறித்து விசாரணை நடத்திய அமலாக்கத் துறை, ஏஜேஎல் நிறுவனத்தின் ரூ.2,000 கோடி சொத்துகளை அபகரிக்கும் நோக்கில், அந்த நிறுவனத்துக்கு காங்கிரஸ் கட்சி கடன் அளித்ததாக குற்றஞ்சாட்டியது. இந்த விவகாரத்தில் சோனியா, ராகுல் உள்ளிட்டோா் ரூ.988 கோடிக்கு பண முறைகேட்டில் ஈடுபட்டதாக அமலாக்கத் துறையின் குற்றப்பத்திரிகையில் குற்றஞ்சாட்டப்பட்டது.
தொடர்புடையது

நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!

சோனியா காந்தியை பார்த்துக் கொண்ட கேரள செவிலியர்: ராகுல் நெகிழ்ச்சி

சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி

நேஷனல் ஹெரால்ட் வழக்கு: அமலாக்கத் துறை மனு மீது ஏப். 20 இல் விசாரணை
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


