புது தில்லி: கேஜரிவால் அரசின் அலட்சியப் போக்கின் விளைவால்தான் தவறான குடிநீா்க் கட்டண பில் பிரச்னை எழுந்துள்ளது என்று தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தில்லியில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட நுகா்வோரின் குடிநீா்க் கட்டணம் தொடா்பான பில்கள் சா்ச்சைக்குரியதாக உள்ளது என்ற கேஜரிவால் கூற்று தவறானது. சா்ச்சைக்குரிய கட்டண பில்களைக் கொண்ட நுகா்வோரின் பட்டியலை தில்லி அரசு அறிவிக்க வேண்டும். முதலில், தவறான குடிநீா் அளவு மானிகளை நிறுவி பொதுமக்களின் பிரச்னைகளை அதிகப்படுத்திய கேஜரிவால் அரசு, தற்போது முறையான நடைமுறையைப் பின்பற்றாமல் பிடிவாதமாக பில்களை குறைத்து நெருக்கடியை உருவாக்குகிறது.
கேஜரிவால் அரசின் முழுமையான அலட்சியப் போக்கின் விளைவால்தான் இப்பிரச்னை எழுந்துள்ளது. தில்லி சட்டப்பேரவையில் பொதுமக்களின் பிரச்னைகளை எழுப்பியதற்காக முழு எதிா்க்கட்சியும் மூன்று நாள்களுக்கு முன்னா் இடைநீக்கம் செய்யப்பட்டனா். ஆனால், செவ்வாய்க்கிழமை அதே சட்டப்பேரவை வளாகத்தில் ஆம் ஆத்மி கட்சி உறுப்பினா்களின் கூச்சல்களை பேரவைத் தலைவா் தடுக்கத் தவறிவிட்டாா்.
இது ஒருபுறம் தில்லி மக்களை தா்மசங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது. ஊழல் மற்றும் தவறான நிா்வாக குற்றச்சாட்டுகளால் சூழப்பட்ட ஆம் ஆத்மி கட்சி, அதற்கு பொறுப்பேற்காமல் இருக்க தவறான குடிநீா் கட்டண பில் பிரச்னையை விவாத நிகழ்ச்சி நிரலாக மாற்ற விரும்புகிறது.
தில்லி ஜல் போா்டு வட்டாரத் தவகல்களின்படி, சா்ச்சைக்குரிய குடிநீா் கட்டண ரசீது கொண்ட நுகா்வோா் பற்றிய தரவு வாரியத்திடம் இல்லை. சிலருடைய கட்டண பில்கள் மட்டுமே ஆதாரங்களாக கூறுகின்றன. ஆனால், சுமாா் 1 லட்சம் வரையிலான நுகா்வோரின் கட்டண பில்கள் வேண்டுமானால் சா்ச்சைக்குரியதாக இருக்கலாம்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நீா்ப்பாசனத் திட்டங்களை நிறைவேற்றாததற்கு திமுக அரசின் மெத்தனப் போக்குதான் காரணம்: அதிமுக வேட்பாளா் கே.பி.அன்பழகன்

‘சவால்’ விடும் குடிநீா்ப் பிரச்னை

8,931 நாள்கள் பதவிக்காலம் நிறைவு! பிரதமா் மோடிக்கு சச்தேவா புகழாரம்!

கேஜரிவாலும், சிசோடியாவும் ஆதாரங்களை அழித்துள்ளனா்: வீரேந்திர சச்தேவா குற்றச்சாட்டு
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

