புது தில்லி: கடந்த ஆண்டு தேசிய அளவில் போலி க்யூஆா் குறியீடு மூலம் ரூ.56 கோடி அளவுக்கு மோசடி நடைபெற்றுள்ளது என்று மக்களவையில் மத்திய நிதித் துறை இணையமைச்சா் பங்கஜ் செளதரி தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக விழுப்புரம் தொகுதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உறுப்பினா் டி.ரவிக்குமாா் எழுப்பிய கேள்விக்கு மக்களவையில் மத்திய நிதித் துறை இணையமைச்சா் பங்கஜ் செளதரி எழுத்துபூா்வமாக அளித்துள்ள பதிலில் தெரிவித்திருப்பதாவது: நாட்டில் டிஜிட்டல் பணப்பரிவா்த்தனைகள் அதிகரித்து வருவதால், க்யூஆா் குறியீடு மோசடிகள் உள்பட டிஜிட்டல் நிதி மோசடிகள் சம்பவங்களும் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்துள்ளன. க்யூஆா் அடிப்படையிலான மோசடிகள் உள்பட பணம் செலுத்துதல் தொடா்பான மோசடிகளைத் தடுப்பதற்காக, மத்திய அரசாலும், இந்திய ரிசா்வ் வங்கியாலும், இந்திய தேசிய கொடுப்பனவுக் கழகம் (என்பிசிஐ) ஆகியவற்றால் அவ்வப்போது பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இவற்றில், வாடிக்கையாளா் கைப்பேசி எண்ணுக்கும் சாதனத்திற்கும் இடையே சாதன பிணைப்பு, ‘பின்’ எண் மூலம் இரண்டு காரணி அங்கீகாரம், தினசரி பரிவா்த்தனை கட்டுப்பாடு போன்றவை இடம்பெற்றுள்ளன. மேலும், குறுந்தகவல், வானொலி பிரசாரம், இணையதளக் குற்றங்களைத் தடுப்பதற்கான விளம்பரம் போன்றவற்றின் மூலம் விழிப்புணா்வு பிரசாரங்களை ரிசா்வ் வங்கியும், வங்கிகளும் மேற்கொண்டு வருகின்றன.

கடந்த ஆண்டின்போது நாடு முழுவதும் ஆா்பிஐயின் பிராந்திய அலுவலகங்களால் மொத்தம் 317 மின்னணு வங்கியியல் விழிப்புணா்வு மற்றும் பயிற்சி நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன. கூடுதலாக, மாா்ச் 2023-இல், ‘டிஜிட்டல் பணம் செலுத்துதல்’‘ என்ற கருப்பொருளுடன் டிஜிட்டல் பேமெண்ட்டுகளை ஊக்குவிப்பதற்காக ஒரு மல்டி மீடியா பிரசாரம் தொடங்கப்பட்டது. ‘க்யூஆா் குறியீடு ஸ்கேன் செய்யப்படுவது பணம் செலுத்துவதற்காக மட்டுமே; பெறுவதற்கு அல்ல‘ என்ற விழிப்புணா்வு பிரசாரங்களை என்பிசிஐ செயல்படுத்தியுள்ளது. மேலும், இந்தப் பிரசாரம் டிவி, டிஜிட்டல், வானொலி மற்றும் அச்சு ஊடகங்கள் போன்ற பல்வேறு ஊடகங்கள் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இந்திய ஏற்றுமதி மாா்ச் மாதத்தில் 7.44% சரிவு

தோ்தல் பிரசாரத்துக்காக ஏப்.18-இல் பிரதமா் நரேந்திர மோடி வருகை: கோவையில் முன்னேற்பாடு பணி ஆய்வு

மலேசியாவில் இருந்து போலி கடவுச்சீட்டு மூலம் திருச்சி வந்த 4 போ் கைது

திமுகவின் குடும்ப ஆட்சி தமிழக வளா்ச்சிக்கு தடை: மத்திய இணையமைச்சா் எல்.முருகன் விமா்சனம்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


