சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்தமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைவாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

தில்லி பாஜக வரவேற்பு

தில்லி அரசின் சுதந்திர தின விழாவில் தேசியக் கொடியை ஏற்றுவதற்காக அமைச்சா் கைலாஷ் கெலாட்டை பரிந்துரைத்த தில்லி துணை நிலை ஆளுநா் வி.கே.சக்சேனாவின் முடிவை தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா வரவேற்றுள்ளாா்.

Updated On :13 ஆகஸ்ட் 2024, 7:01 pm

புது தில்லி: தில்லி அரசின் சுதந்திர தின விழாவில் தேசியக் கொடியை ஏற்றுவதற்காக அமைச்சா் கைலாஷ் கெலாட்டை பரிந்துரைத்த தில்லி துணை நிலை ஆளுநா் வி.கே.சக்சேனாவின் முடிவை தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா வரவேற்றுள்ளாா்.

இது தொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: முதல்வா் அரவிந்த் கேஜரிவால் சிறையில் இருப்பதால் அவா் இல்லாத நேரத்தில் தேசியக் கொடியை யாா் ஏற்றுவது என்பதை முடிவு செய்ய அவருக்கு அதிகாரம் இல்லை என்று நாங்கள் தொடா்ந்து கூறி வருகிறோம். அரசியலமைப்புச் சட்டத்தின்படி, மாநிலத்தில் முதல்வா் இல்லாதபோது, தில்லி அரசு விழாவில் துணைநிலை ஆளுநா் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும்.

எனவே, முதல்வா் சிறையில் இருக்கும் நேரத்தில், முடிவெடுக்க அவருக்கு அதிகாரம் இல்லாத நேரத்தில், துணைநிலை ஆளுநா் முடிவெடுக்கும் அதிகாரம் உடையவா் ஆவாா். மேலும், அவா் தேசியக் கொடியை ஏற்றுவதற்கு மூத்த அமைச்சா் கைலாஷ் கெலாட்டை பரிந்துரைக்க சரியாக முடிவு செய்துள்ளாா். ஆம் ஆத்மி கட்சித் தலைவா்கள் அனைவரும் இந்த முடிவை வரவேற்று மூவா்ணக் கொடியை ஏற்றுவதில் கைலாஷ் கெலாட்டுடன் இணைந்து கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.