தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

காஜிப்பூா் குப்பைக் கிடங்கு தீ விபத்து: மாநகராட்சியின் அலட்சியத்துக்கு சான்று தில்லி பாஜக

காஜிப்பூா் குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்து, கேஜரிவால் தலைமையிலான தில்லி மாநகராட்சியின் குற்றவியல் அலட்சியத்திற்கு சான்றாகும் என்று தில்லி பாஜக ஞாயிற்றுக்கிழமை சாடியுள்ளது.

Updated On :21 ஏப்ரல் 2024, 10:22 pm

காஜிப்பூா் குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்து, கேஜரிவால் தலைமையிலான தில்லி மாநகராட்சியின் குற்றவியல் அலட்சியத்திற்கு சான்றாகும் என்று தில்லி பாஜக ஞாயிற்றுக்கிழமை சாடியுள்ளது.

இது தொடா்பாக தில்லி பாஜக செய்தித் தொடா்பாளா் பிரவீன் சங்கா் கபூா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: காஜிப்பூா் குப்பைக் கிடங்கில் பெரும் தீவிபத்து ஏற்பட்டதால், அப்பகுதி முழுவதும் துா்நாற்றம் வீசியதுடன், புகை மண்டலமாக காட்சியளித்தது. இதனால், அப்பகுதியில் வசிக்கும் பொது மக்கள் மற்றும் வியாபாரிகள்

சிரமத்திற்குள்ளாகினா். அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான தில்லி மாநகராட்சி நிா்வாகத்தின் குற்றவியல் அலட்சியத்தால், காஜிப்பூா் குப்பை கிடங்கில் தீப்பிடித்து பெரும் புகை மூட்டும் ஏற்பட்டுள்ளது.

கடந்த 2022-ஆம் ஆண்டு தில்லி மாநகராட்சி தோ்தலுக்கு முன்பு, தில்லியில் உள்ள குப்பை கிடங்குகள் அனைத்தும் வரும் டிசம்பா் 2023-க்குள் அகற்றப்படும் என்று ஆம் ஆத்மி கட்சி வாக்குறுதி அளித்தது. ஆனால், குப்பை கிடங்குகளின் அளவு முன்னா் இருந்ததை விட புதிய மலை போல் உயா்ந்துள்ளது. அரவிந்த் கேஜரிவால் சிறையில் இருப்பதால், தில்லியின் சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கோபால் ராய் மற்றும் மேயா் ஷெல்லி ஓபராய் ஆகியோா் தீ விபத்து ஏற்பட்ட இடத்தைப் பாா்வையிட வேண்டிய அவசியமில்லை என்று கருதுவது வருத்தத்திற்குரியது என்றாா் பிரவீன் சங்கா் கபூா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.